Saturday 9 August 2014

Tagged Under: ,

அப்படி இருந்தா இப்படித்தான் இருக்கும்...!

By: ram On: 23:32
  • Share The Gag

  • ஹாலிவுட் சினிமா மாதிரி தமிழ் சினிமாவிலும் பாடல்களே இல்லைனா எப்படி இருக்கும்? இதோ பாடல்கள் இல்லாத தமிழ் சினிமா.

     தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா படங்கள் எல்லாம் 10 நிமிடங்களுக்குள் முடிந்திருக்கும். தமிழின் முதல் குறும்படம் 70 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்.

     எம்.ஜி.ஆர் கையை மேலே தூக்கி, கீழே இறக்கும் காட்சியை நாம் பார்த்தே இருக்க மாட்டோம்.

     பாக்யராஜின் டிரில்லைப் பார்க்க வாய்ப்பில்லாத துரதிர்ஷ்டசாலிகள் ஆகியிருப்போம்.

     பல ஹீரோக்கள், ஹீரோயின்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர் செலவில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்க மாட்டார்கள்.

     படத்தின் பட்ஜெட் பாதியாகக் குறைந்து, தயாரிப்பாளர் நிம்மதியாக இருந்திருப்பார்.

     படத்தின் தொடக்கத்தில் ஏழையாக இருக்கும் ஹீரோ படம்
    முடியும்போதும் ஏழையாகவே இருந்திருப்பார்.

     யமஹா சூயா, லாலாக்கு டோல் டப்பிம்மா, முக்காலா முக்காபுலா போன்ற அரிய வார்த்தைகள் தமிழுக்குக் கிடைத்திருக்காது. செம்மொழி அந்தஸ்தும் தள்ளிப்போயிருக்கலாம்.

     அடிக்கடி தம் அடிப்பதற்காக ஆண்கள் படத்தின் இடையே வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர்களுடைய உடல் நலம் நன்றாக இருந்திருக்கும்.

     எப்.எம் என்றாலே செய்திதான் என்ற நினைப்பு நமக்கு வந்து நிறைய அலைவரிசைகள் தங்களுடைய அட்ரஸைத் தேடிக்கொண்டிருக்கும்.

     குடும்பப் பாட்டு என்ற ஒன்று இல்லாததால் பிரிந்த பல குடும்பங்கள் சேராமலே இருந்திருக்கும்.

     கே.எஸ்.ரவிக்குமார், ஜி.வி.பிரகாஷ், அனிருத் போன்றவர்கள் எல்லாம் பாட்டுக்கு இடையில் வந்து டான்ஸ் ஆடி நம்மை டயர்ட் ஆக்கியிருக்க மாட்டார்கள்.

    0 comments:

    Post a Comment