Monday 4 August 2014

Tagged Under: ,

பெண்களுக்கு வரும் தலை முதல் கால் வரை வலி..!

By: ram On: 18:24
  • Share The Gag

  • பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசாரியாக பாதிகாலம் வலியால் அவதியுறுகிறார்கள். உச்சி முதல் பாதம் வரை வலி உண்டாக்ககூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது.

    அலுவலக வேலை பளு, வீட்டு வேலை பளு மற்றும் பயணத்தால் ஏற்படும் பளு ஆகியவை சேர்ந்து மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட நாட்களுக்கு தலை முதல் கால்வரை வேறுபட்ட இடங்களில் வலி, நாளுக்கு நாள் புதிய பாகங்களில் புதிய வலி ஏற்படுவது, சோர்வு, தலை வலி, ஞாபகமறதி, தூக்கமின்மை, புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் எழுவது, இவையெல்லாம் பைப்ரோ மையால்ஜியாவின் அறிகுறி.

    ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி தூக்கமின்மை தாக்கினாலும் இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். பைப்ரோ மையால்ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவம் உடல்பயிற்சி, மனஅமைதி காத்தல் ஆகியவை முக்கியமாகும். இந்த நோயை பற்றி முழுமையாக அறிதலும் மருத்துவ ஆலோசனை பெறுதலும் மிக மிக முக்கியமானது.

    இந்த நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இரவு நேரத்தில் அதாவது அடுத்தடுத்து இரவு சாப்பாடும் தூக்கமும் தான் என்ற நிலையில் காபி அல்லது மது அருந்துவதை காட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது.

    இதுவரை இந்த நோய்க்கான காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு செரடோலின் என்ற வேதிப்பொருளின் அளவு மூளையில் குறைந்திருப்பதும், சப்ஸ்டேன்ஸ்-பி என்ற வலி உண்டாக்கக்கூடிய வேதிபொருள் தண்டுவடத்தில் அதிகமிருப்பதையும்,

    இவர்களின் மூளை வலி உணர்ச்சிக்கு அதிகமாக தூண்டப்படுவதையும், உடல் பருமன் அதிக இருப்பவர்களும் ஆர்த்ரைட்டிஸ், நோய் கொண்டவர்களுக்கும் அதிகம் வருவதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.

    0 comments:

    Post a Comment