Sunday 10 August 2014

Tagged Under: ,

“ஆண்மை சோதனை” செய்வது எப்படி?

By: ram On: 19:38
  • Share The Gag

  • ஆணுக்கு அவருடைய விந்துக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதை ஆணின் விந்து சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

    அதில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை என்று தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இது ஆண்மை பரிசோதனை இல்லை. சொல்லப்போனால் ஆண்மை பரிசோதனை என்ற ஒன்றே நடத்த முடியாது.

    ஆண்மை சோதனைக்கு பீனைல் டாப்லர் (Penile Doppler) என்று பெயர். இந்த சோதனையின்போது ஆண் உறுப்பில் ஒரு இன்ஜக்ஷன் போடப்படும். அப்படி ஊசிபோட்டதும் ரத்த நரம்புகளில் ரத்தம் பீறிட்டுச் செல்லும்.

    இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும். ஒருவேளை ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது.

    அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கும் ஆண்மை சோதனையாக இருக்கிறது.

    ஆனால், அவருக்கு உடம்பு சரியாக இருக்கிறதா என்பதை வேண்டுமானால் இந்தச் சோதனையை வைத்துச் சொல்லலாமே தவிர அவரை ஆண்மை இல்லாதவர் என்று முடிவு செய்துவிட முடியாது

    0 comments:

    Post a Comment