Wednesday 13 August 2014

Tagged Under: ,

பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று !

By: ram On: 23:10
  • Share The Gag

  • ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12
    பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று

    ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12. ஏன் 12? இதற்கு சித்தர்கள் சித்தர்கள் அளித்த விளக்கம் என்ன?

    எப்படி ஒரு செடி நான்கு பருவங்களையும் கண்டபின் பூ பூக்கிறதோ , அது போல் நம் உடலில் உள்ள 12 அவயங்களும் முழு வளர்ச்சி அடைந்து தன்னை தனது அடுத்த பயணத்திற்கு தயார் செய்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 வருடங்கள்.

    இந்த 12 வருடங்கள் 12 இராசி/நட்சத்திர மண்டலங்களைக் குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்த பின், பூமி இந்த 12 நட்சத்திர மண்டலங்களையும் 12 முறை கடந்து முடிக்கும் பொது, உடலின் 12 அவயங்களின் அடிப்படை வளர்ச்சியும் முற்று பெரும். இங்கிருந்து தொடங்குவதே இவ்வுடலின் அடுத்த பயணமான தன்னுள் இருந்து மற்றொரு ஜீவனை உருவாக்கும் பணி.

    இதன் காரணம் கொண்டே, உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை சித்தர்கள் - " பூப்பெய்துதல்" என்றும் "பருவம் அடைதல்" என்றும் அழைத்தனர். ( தமிழ் அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட )

    12 அவயங்கள் என்ன என்ன என்று கேட்போருக்கு- இதயம், மூளை, நுரையீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை, ஐம்புலன்கள்(5).

    0 comments:

    Post a Comment