Saturday 30 August 2014

Tagged Under: ,

அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

By: ram On: 19:27
  • Share The Gag

  • ‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே… ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார் என்று பெரிதும் நம்பப்படுகிறார் குறளரசன். ஏனென்றால் அவரது அப்பா டி.ஆர் போட்ட பாடல்கள் அப்படி. இன்றும் எங்காவது டி.ராஜேந்தரின் பழைய பாடல்களை கேட்டால், வண்டி ஒரு நிமிஷம் நின்று அனுபவித்து விட்டு போகிற அளவுக்கு இருக்கிறது அவரது காலத்தை கடந்த ஹிட்டுகள். இத்தனைக்கும் இசைஞானி இளையராஜா காலத்திலேயே பாடல்களுக்காக கோல்டன் டிஸ்க் விருதுகள் வாங்கியவர் அவர்.

    காலப்போக்கில் அவரும் டண்டணக்கரா ஆகிப் போனார் என்பது வேறு விஷயம். ஆனால் அதிலும் ஒரு தாளம் இருந்தது. சுதி இருந்தது. எல்லாவற்றும் மேல் ஒரு ருசி இருந்தது. அவரது வாரிசான சிம்பு நடிக்க வந்தாரே ஒழிய இசையமைப்பாளர் ஆகவில்லை. அவர் நினைத்திருந்தால் இன்று முன்னணியிலிருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களையும் ‘வர்றீங்களா விளையாட்டுக்கு?’ என்று சவால் விட்டிருக்க முடியும். ஆனால் அவர் ரூட் மாறி போய்விட்டார். இன்று குறள்….?

    பாண்டிராஜ் இயக்கி வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளரே குறள்தான். தமிழ் திரையுலகமே ரொம்பவும் ஆவலோடு எதிர்பார்த்து வருவது இந்த படத்தையும் அதைவிட இந்த படத்தில் இசையமைத்திருக்கும் குறளையும்! ஆனால் குறள் என்ன செய்கிறாராம்? படத்தில் ஐந்து பாடல்களை திட்டமிட்டிருக்கிறாராம் பாண்டிராஜ். ‘அதுல ரெண்டு வந்தாச்சு… மிச்சம் மூணு எங்கேப்பா…?’ என்றால், ‘அந்த மூணுதான்ணே இது’ என்று பதில் சொல்லக்கூட ஆளைக் காணோமாம்! அண்ணனுக்கு போட்டியா தம்பி வருவார்னு பார்த்தால், மற்றவங்களுக்கு இம்சை கொடுக்கிற விஷயத்தில்தான் அது நடக்கும் போலிருக்கு என்கிறார்கள் இ.ந.ஆ யூனிட்டில். படமே முடிஞ்சுருச்சு. பாடல்களுக்காக காத்திருக்க ஆரம்பித்திருக்கிறாராம் பாண்டிராஜ்.

    என்ட்ரி டிக்கெட் போடும்போதே எக்சைட் கேட் திறக்கற டயத்தையும் கேட்டு தெரிஞ்சுக்க வேணாமா சார்…?

    0 comments:

    Post a Comment