Friday, 11 October 2013

'சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்'!

By: ram On: 19:26
  • Share The Gag


  • யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது.


    ஜிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், யானைகள், முழுமையாக நிரப்பப்பட்ட உணவு வாளிகளை, மனிதர்கள் சுட்டிக்காட்டும்போது, காலியான உணவு வாளிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவையாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.


    சுட்டிக்காட்டும் சைகை, மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு, உயிர்வாழ மிகவும் முக்கியமாக உள்ள சிக்கலான சமூகங்களில் , மிகவும் பயனுள்ள ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ந்திருக்கின்றன என்பதை இது காட்டுவதாக இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய ஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட் பைர்ன் கூறினார்.