Monday, 3 November 2014

என்ன கண்ட படி திட்டுங்க சார் - அர்ஜுனிடம் அஜித் சொன்ன சுவாரசிய தகவல்

By: ram On: 16:39
  • Share The Gag
  • ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் பல படங்களில் நல்லவராக நடித்தாலும் அவரை வில்லனாக காட்டிய படம் மங்காத்தா.

    இப்படம் வெளிவந்து சக்கைபோடு போட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அஜித் கூட நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் அர்ஜுன் அவர்கள் தெரிவித்தார் .

    அதாவது அஜித் மாதிரி ஒரு நல்ல கலாச்சாரமிக்க மனிதரை பார்க்க முடியாது, முதலில் இப்படத்துக்காக என்னிடம் அணுகிய போது அஜித் அவர்களே வந்தார், இது என்னுடைய 50வது படம் கதை கேட்டு உங்களுக்கு பிடித்தால் மட்டும் பண்ணுங்க என்றார்.

    அது மட்டுமில்லாமல் சண்டை காட்சிகளில் என்னை கண்ட படி திட்டுங்க சார் அப்போ தான் பவர் ரா இருக்கும் என்ற திட்டை கேட்டு வாங்கினர். அவருடைய சமையல் கலை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும் என்று தெரவித்தார்.