Tuesday, 30 September 2014

பெண் குழந்தை பெற்ற அஜீத் ஹீரோயின்

By: ram On: 01:17
  • Share The Gag
  • தமிழில் ‘பிரியம்', ‘லவ் டுடே', ‘கங்கா கௌரி',  அஜீத் ஜோடியாக ‘ரெட்டை ஜடை வயசு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் கடைசியாக தமிழில் ‘ஒன்பதுல குரு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘வாலு' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் நடித்து வரும் மந்த்ரா, ஸ்ரீனிவாஸ் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றினை தொகுத்து வழங்கினார் மந்த்ரா. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மந்த்ராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மந்த்ரா கூறும்போது, எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என் கணவரும் அதைத்தான் விரும்பினார். குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இனி ஒரு வருடத்துக்கு பிறகே நடிப்பேன் என்றார்.