Showing posts with label முன்னோர்களின் மரபு!. Show all posts
Showing posts with label முன்னோர்களின் மரபு!. Show all posts

Wednesday, 3 September 2014

'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' - கதையுடன் விளக்கம்!

By: ram On: 18:14
  • Share The Gag
  • தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.

    'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே'


    ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப்பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன. இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக்கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.

    ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.

    ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது 'ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத்தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது 'நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது.

    பின்னர் சொன்னது 'அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனது திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. எனவே நான்தான் சிவம் ஆகிய இறைவன். நீ அந்த சிவத்திற்குக் கட்டுண்ட ஆன்மா என்பதை மறவாதே. நீ இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் ஆன்மா. உன் இயக்கம் நின்று விட்டால் என்னைப் போல சிவம் ஆகி விடுவாய். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய் உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

    இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. இயங்காமல் இருந்தாலும் கல்தான் இறைவன் ஆகிய தலைவன்; இயங்கிக் கொண்டே இருந்தாலும் பறவை ஒரு ஆன்மாவே ஆகும். ஆன்மா அடிக்கடி சிவத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் சிவத்திற்கு கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதற்காக உருவாக்கப் பட்டதுதான் இந்தப் பழமொழி. இனி சரியான பழமொழி இது தான்.


    'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
    (கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா)

    Tuesday, 26 August 2014

    திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

    By: ram On: 16:53
  • Share The Gag
  • திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
    ஒருவர் இன்னொருவரிடம்
    பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
    தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
    அரிசி, நெல் முதலானவற்றை
    கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.


    பணமாயிருந்தால் தட்டு.
    இது எதனாலென்றால்,
    கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
    மேல்கீழாய் இருந்தாலும்
    அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.


    வெறுமனே கையால் கொடுத்தால்,
    கொடுப்பவர்கை மேலும்
    வாங்குபவர்கை கீழுமிருக்கும்.


    இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
    நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
    எப்பொருளை கொடுத்தாலும்
    தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர்
    நம் முன்னோர்கள்.


    இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
    # அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
    கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

    Monday, 25 August 2014

    தாலி கட்டுவது ஏன்?

    By: ram On: 17:25
  • Share The Gag
  • தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

    திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

    அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

    உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

    தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

    “முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
    அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

    என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

    ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

    உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

    தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

    நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

    வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து டிப்ஸ்...

    By: ram On: 17:13
  • Share The Gag
  • எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும்.


    வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


    நம் வீட்டில் உள்ள தலை வாசல் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அட்வான்ஸ்ட் ஃபெங் சூயி மற்றும் வாஸ்து சாஸ்திர ஆலோசகரான டாக்டர். ஸ்னேஹல் எஸ். தேஷ்பாண்டே இதனை பற்றி விலாவரியாக கூறுகிறார். தலைவாசல் என்பது வீட்டின் வாயை போன்றதாகும். இதன் வழியாகத் தான் வீட்டிற்குள் அனைத்து சக்திகளும் உள்ளேறும். அதனால் இது எப்படி இருக்க வேண்டும் என்றும், எப்படி இருக்க கூடாது என்றும் சில விதிமுறைகள் உள்ளது.


     தென் மேற்கு திசை வீடு

    தென் மேற்கு திசையில் பார்த்தமாறு இருக்கும் வாசல் கதவை கொண்ட வீட்டை தேர்ந்தெடுக்காதீர்கள். இது தீய சக்திகள் உள்ளேறும் திசையாகும். அதனால் பல போராட்டங்களை சந்தித்து, பல நல்வாய்ப்பை இழக்க நேரிடுவீர்கள். ஆனால் ஃபெங் சூயி சாஸ்திரப்படி, அந்த மாதிரியான வீட்டில் செல்வ செழிப்பு புரளும் யோகம் இருந்தால், முதல் 3-4 வருடங்களுக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பணப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். மேலும் வீட்டின் தலைவாசல் கதவு ஏற்கனவே தென் மேற்கு திசையை நோக்கி இருந்தால், இடது கையில் கதம் வைத்திருக்கும் இரண்டு அனுமான் படங்கள் அல்லது டைல்ஸ் கற்களை கதவின் வெளியே பதித்து, அதன் பின் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். மஞ்சள் நிற மாணிக்க கல், எர்த் கிரிஸ்டல், ஈயம் போன்ற கற்களும் இந்த பிரச்சனையை தீர்க்க உதவும். குறிப்பாக இவைகளை பயன்படுத்தும் முன் வல்லுனர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இருப்பினும் இவ்வகை வீட்டை தவிர்ப்பதே நல்லது.


     தென் கிழக்கு திசை வீடு

    தென் கிழக்கு திசையை நோக்கியுள்ள தலைவாசல் கதவு இருந்தால், உடல்நல குறைவு, கோபம், வழக்குகள் போன்றவைகள் உள்ளேறும். இவ்வகை வீடுகளில், தலைவாசல் கதவுகளின் வெளிப்பக்கமாக காயத்ரி மந்திரம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டுங்கள். உரிய ஆலோசனையோடு கோரல், மஞ்சள் மாணிக்க கல் மற்றும் செம்பு போன்ற கற்களை பயன்படுத்தி, இந்த கதவின் குறையை சற்று குறைக்கலாம்.


     தெற்கு பார்த்த வீடு

    தெற்கை நோக்கி அமைந்துள்ள தலைவாசல் கதவுகள், கூரிய சக்தியை உள்ளே கொண்டு வரும். இது வீட்டிலுள்ள நேர்மறையான சக்தியை சீர் குலைக்கும். இவ்வகை கதவுகள் இருந்தால், பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும். சில நேரம் சண்டை மற்றும் வாக்குவாதத்திலும் இழுத்து விடும். இந்த பிரச்சனைக்கும், மேற்கூறிய படி அனுமான் படம் பதித்த படத்தையோ, டைல்ஸ் கற்களையோ கதவுகளின் வெளிப்பக்கமாக பதித்து விடுங்கள். ஈயம் மற்றும் பூனைக் கண் கிரிஸ்டல்களை பயன்படுத்தி, இதிலிருந்து சற்று பாதுகாக்கலாம். ஆனால் இந்த கதவு நான்காம் படவில் இருந்தால், குடியிருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.


     மேற்கு பார்த்த வீடு

    மேற்கு திசையை நோக்கி தலைவாசல் கதவு அமைந்திருந்தால், அது சுறுசுறுப்பான திறனையும், கொண்டாட்ட திறனையும் அளிக்கும். அதனால் இளைஞர்களுக்கு இது மிகவும் நல்லதாக அமையும். அதனால் தான் ஜப்பானில் உள்ள கெய்ஷா வீடுகள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

     வடமேற்கு திசை வீடு

    வடமேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும் தலைவாசல் கதவுகளினால், பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதனுடன் சேர்ந்து மற்ற வாஸ்து விதிமுறைகள் படி வீடு இருந்தால், ஆரோக்கியம், பொருள் வளம், செல்வம் என அனைத்தும் பெருகும். இதில் இருக்கும் ஒரே குறை, வாசல் கதவு மேற்கை நோக்கி இருந்தால், வீட்டின் முதன்மையான ஆண் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அதே போல் வடக்கை நோக்கி இருந்தால், இது பெண்ணுக்கு பொருந்தும்.


    குறிப்பு


    பொதுவாக கிழக்கு , வடக்கு, வட கிழக்கு போன்ற திசைகளை நோக்கி இருக்கும் தலைவாசல்கள் தான் நல்லது. இருப்பினும் இழுவை, அளவு குறைப்பு, நிலத்தடி நீர் தொட்டி, ஃபெங் சூயி போன்றவைகளால் தான் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும், பொருள் வளமும் அடங்கியுள்ளது.


    நண்பர்களே.. தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள்..!

    By: ram On: 17:00
  • Share The Gag
  • இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

    நண்பர்களே.. தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள் !!

    இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்

    ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

    சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

    இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

    இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

    இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

    ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

    By: ram On: 16:51
  • Share The Gag
  • ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

    முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

    ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

    Page3b * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

    * ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.

    * கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

    *தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

    * சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

    * பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

    * இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
    ஊஞ்சல்கள் பலவகை:

    சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

    நவீன வகை ஊஞ்சல்கள் "சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

    தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

    மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

    கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

    கூடாத ஆமைகள்!

    By: ram On: 16:38
  • Share The Gag
  • ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள்.

    எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை.

    அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது!

    அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!

    வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!

    இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டு எதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்பிள்ளை தேர்ச்சி பெற்றால் பொறாமை!

    அண்ணனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறந்து தம்பிக்கு பெண் குழந்தைகளாகப் பிறந்தால் பொறாமை!

    நாம் வயதான காலத்தில்கூடச் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்தால், இளமையிலேயே தளர்ச்சியாயிருப்பவர்களுக்குப் பொறாமை! இப்படி பொறாமையின் வரிசை நீளும்!

    காரணமில்லாத சில பொறாமைகளும் உள்ளன! அவற்றைச் சகிக்க முடியாது.
    ஏன் இந்த பொறாமை இதனால் யாருக்கு லாபம்? நெஞ்சம் இருண்டு போவதால் முகமும் இருளும்! எரிச்சலைத் தவிர நாம் காணும் பலன் என்ன கபீர்தாசர் சொல்வார்,

    'தான் தான் மே லிகாஹை
    கான் கான் கா நாம்!'


    ஒவ்வொரு தானியத்திலும் அதைச் சாப்பிடப் பிறந்தவன் பெயர் எழுதப்பட்டுள்ளதாம். இறைவன் வகுத்தது எதுவோ அதுவே நாம் அனுபவிக்கப் போகிற பொருள்.

    'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

    என்ற குறளை ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதச் சொல்வோம்! உடலெல்லாம் விளக்கெண்ணை பூசிக் கொண்டு ஆற்று மணலில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும்! 'வருத்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போமின் என்றால் போகா!'

    ஆகவே பொறாமை என்ற 'ஆமை' புகாமல் பார்த்துக் கொள்வது அறிவுடைமை!
    அதுவே நித்தம் நிம்மதி தரும்!

    Tuesday, 29 July 2014

    எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?

    By: ram On: 20:00
  • Share The Gag



  • எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?


    தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.


    மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,


    வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,


     ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.


    கெட்ட கனவு வருகிறதா:


    சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.


    ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்

    வைணதேயம் விருகோதரம் சயனே,

    யஸ் ஸ்மரேன் நித்யம்

    துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.



    தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது

    Tuesday, 22 July 2014

    நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல்!

    By: ram On: 19:34
  • Share The Gag
  • விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

     மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

     உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள் பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

    பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள் இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்.

    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

    By: ram On: 17:23
  • Share The Gag
  •  

    கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

    . . . . உலகோர்க் கெல்லாம் காரமா

    மூலியடா பங்கம்பாளை கொண்டு

    . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

    கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

    . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

    நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

    . . . . அன்றான ஆகாசகருடன் மூலி

    அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

    - சித்தர் பாடல்.

    ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

    மெட்டி அணிவது ஏன்? அறிவியல் விளக்கம்..!

    By: ram On: 08:17
  • Share The Gag

  • பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.


    கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.


    அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..


    ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.


    பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.


    இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.


     காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்

    Monday, 21 July 2014

    மூக்குத்தி அணிவது ஏன்..? அற்புத விளக்கம்...படித்துப் பாருங்கள்..!

    By: ram On: 18:54
  • Share The Gag
  •          மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.


    இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.


    நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும்.


    இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.


    பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

    Wednesday, 1 January 2014

    பெயர் வைப்பதில் கில்லாடி தமிழர்கள்...!

    By: ram On: 00:16
  • Share The Gag



  • பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என அனைத்திற்கும் பெயர் வைப்பதில் கில்லாடிகள் தமிழர்கள். பெயர் வைக்கும் போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலை கொள்வதும் கிடையாது.

    குறிப்பாக திராவிட ஆட்சிக்காலத்தில் இந்த பெயர் வைக்கும் வைபவம் அரசின் சாதனை பட்டியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த பெயர் வைக்கும் படலம் விவசாயத்துறையையும் விட்டு வைக்க வில்லை.

    நெல் பயிரையும் அலையாய் அலைக்கழித்து இருக்கின்றனர். நமது அரசியல்வாதிகளின் நகைச்சுவை. நெல் சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம் திருந்திய நெல் சாகுபடி. குறைவான தண்ணீரில் கூடுதல் மகசூல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் ஆங்கிலத்தில் System of Rice Intensification என்றழைக்கப்படுகிறது.

    1970களிலேயே இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போதும், அமெரிக்காவின் நியூார்க்கின் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைகழகம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. உணவு, வேளாண்மை, மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் நார்மன் உபாஃப் இதனை உலகெங்கும் எடுத்துச் சென்றார்.

    2005களில் தான் ஆசியாவில் திருந்திய நெல் சாகுபடி வளர்ந்தது. தமிழகத்திலும் சில ஆண்டுகளாகவே பிரபலமடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருந்திய நெல் சாகுபடி குறித்து விரிவாக காணொளி தொகுப்பு ஒன்றை தமிழக வேளாண்மை துறை தயாரித்துள்ளது.

     அரை மணிநேரத்திற்கும் மேலாக ஒளிபரப்பப் தக்க வகையிலான இந்த காணொளி தொகுப்பை அப்போதைய முதலமைச்சரிடம் காண்பிப்பதற்காக சில நிமிடங்கள் கொண்ட தொகுப்பாக குறைத்து முதலமைச்சரிடம் காண்பித்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி தொடர்பான அந்த காணொளியை பார்த்த முதலமைச்சர் தான் பிறந்த தஞ்சை தரணிக்கு இது உபயோகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

    ரொம்பவும் மகிழ்ந்து போன அவரிடம் முழு படத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். முடிவில், “இந்த முறையில் நெல் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும். இதனால் செழுமை ஏற்படும். அதனால் செழுமை நெல் சாகுபடி என்று பெயர் வைங்கய்யா,” என்று சொல்லி இருக்கிறார். System of Rice Intensification என்பதற்கு திருந்திய நெல் சாகுபடி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

    அப்படி தான் வேளாண் பல்கலைக்கழகம் பெயர் வைத்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ அதனால என்னய்யா? கடைசியில விவசாயிகளுக்கு செழிப்பு தானே வரும் செழுமை நெல் சாகுபடினு பெயர் வைய்ங்கய்யா. தமிழ்ல அது தான் சரியா வரும் என்று சொல்லியிருக்கிறார். சரி என்ன செய்வது சொல்லியது முதலமைச்சர் ஆயிற்றே! புதிய பெயர் சூட்டப்பட்டு விட்டது.

    பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக வேளாண் துறையும் செழுமை நெல் சாகுபடி என்று புதிய நாமகரணம் சூட்டியது. வேளாண் பல்கலை முதல் உலக நெல் ஆராய்ச்சி நிலையம் வரை நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்கு தமிழகத்தில் பயன்படுத்தும் பெயர் செழுமை நெல் சாகுபடி என்று தெரிவிக்கப்பட்டது.

     சில மாதங்கள் உருண்டோடின. தமிழகத்தில் செழுமை நெல் சாகுபடி தொழல் நுட்பத்தில் எவ்வளவு நிலம் பயிரிடப்படுகிறது. என்பது போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் தரப்பட்டன. அதனை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் திடீர் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது ராஜ ராஜ சோழனின் சதய விழா நடைபெற்ற காலம். ஏன்ய்யா பேசாம செழுமை நெல் சாகுபடிங்கிறதுக்கு பதிலா ராஜாராஜன் 1000ம் னு என் பெயர் வைக்க கூடாது என்று கேட்டிருக்கிறார்.

    நெல் என்றால் தஞ்சை, தஞ்சை என்றால் ராஜ ராஜ சோழன், அதனால் ராஜ ராஜன் பெயர் வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அதிகாரிகளோ அதிர்ந்து போய் விட்டார்கள். ஐயா இது வெறும் தொழில்நுட்பம் தான். இதனை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பது தான் பிரச்னை. இது புது ரக நெல் கிடையாது. கோ 40, அம்பை 16 என்று நெல் ரகங்களுக்கு பெயர் வைப்பது போன்று இதற்கு பெயர் வைக்க முடியாது என்று தெரிவித்து இருக்கின்றனர்.

    அதனால என்னய்ய தமிழகத்தில நாம தானய்யா முடிவு செய்யணும். பேசமா ராஜ ராஜன் 1000ம்னு பெயர் வையுங்க என்று முடிவாக கூறி விட்டார் முதலமைச்சர். வேறு என்ன செய்வது சொல்லியது முதலமைச்சராயிற்றே. ராஜ ராஜன் 1000ம் என்று பெயர் சூட்டப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி, செழுமை நெல் சாகுபடியாகி, ராஜ ராஜன் 1000 ஆக பெயர் மாறியது. பிறகு ஆட்சி மாறியது. கட்டடங்கள் முதல் திட்டங்கள் வரை அனைத்திற்கும் பெயர் மாற்றம் நடந்தது.

    அதுபோலவே ராஜ ராஜன் 1000ம் என்ற பெயரும் மாற்றப்பட்டது. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது போல மீண்டும் திருந்திய நெல் சாகுபடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகளும், வேளாண் பல்கலைகழகமும், விவசாயிகளும் என்ன செய்வது? மீண்டும் திருந்திய நெல் சாகுபடியானது System of Rice Intensification.

    Wednesday, 25 December 2013

    பழைய கணக்கீட்டு முறைகள்..!

    By: ram On: 02:32
  • Share The Gag

  • தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது.

    நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர்.


     அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

    8அணு - 1தேர்த்துகள்

    8தேர்த்துகள் - 1பஞ்சிழை

    8பஞ்சிழை - 1மயிர்

    8மயிர் - 1நுண்மணல்

    8நுண்மணல் - 1கடுகு

    8கடுகு - 1நெல்

    8நெல் - 1பெருவிரல்

    12பெருவிரல் - 1சாண்

    2சாண் - 1முழம்

    4முழம் - 1கோல்(அ)பாகம்

    500கோல் - 1கூப்பீடு

    பழக்க வழக்கங்கள்...!

    By: ram On: 02:26
  • Share The Gag



  • தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?




    சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.



    வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?



    இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.



    முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?




    உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

    Tuesday, 17 December 2013

    நம் முன்னோர்களின் ரகசியம்?

    By: ram On: 18:08
  • Share The Gag


  • டெல்லியில் குதுப்மினார் அருகில் இந்த இரும்பு தூண் உள்ளது.. இதை உலக விஞ்ஞானிகள் ஏன் இன்னும் துருப்பிடிக்கவில்லை என ஆராய்ந்தனர்.. பதில் காண முடியவில்லை.


    கி.பி.500ல் சந்திரகுப்த மன்னரால் வைக்கப்பட்டது.. இந்த துருப்பிடிக்காத இரும்பு தயாரிப்பதை நாம் கண்டுபிடித்தால் நமது உலகக்கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். ஏனெனில் எவர்சில்வர் கொண்டு ராட்சச இயந்திரங்களை தயாரிக்க முடியாது செலவு மிக அதிகமாகும்...


    முன்னோர்களின்  இந்த ரகசிய கண்டுபிடிப்பை நம் முன்னோர்களே மறைத்துவிட்டனர்.

    Wednesday, 11 December 2013

    வளர்பிறையில் ஏன் விழாக்கள் கொண்டாடுகின்றனர் ஆராய்வோமா?

    By: ram On: 19:57
  • Share The Gag



  • பண்டைய காலத்தில் மக்கள் திருமணம், திருவிழா போன்ற பல விழாக்களை கொண்டாடினார்கள்.

    அவ்விழாக்களை கொண்டாடுவதற்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை.
    மக்கள் ஒன்று கூட தொலை தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது,
    வாகன வசதிகள் பெருமளவில்லை.


    மாட்டு வண்டிகள் தான் இருந்திருக்கிறது, அதில் எப்படி தொலைதூரம் வேக பயணம் செய்ய முடியும்?

    ஓர் இடத்திற்கு சென்றடைய மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும்.
    அப்படியாயின் இரவு பகல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறதல்லவா.


    ஆம் அன்றைய காலத்தில் எங்கிருந்து மின்சாரம் வந்தது? ஒளிபரப்பி எல்லாம் எங்கிருந்து வந்தது?

    எல்லாம் தீப்பந்தம் தான் தீப்பந்தம் மூலம் எப்படி பெரிய விழாக்களை கொண்டாடமுடியும்?

    அதன் ஒளி போதுமானதாக இருக்குமா, இரவு பகல் அதிக தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால் தீப்பந்தம் எப்படி பயன்படும்?
    காற்றில் அணையாதா, அப்போது எப்படி அவ்வளவு பெரிய விழாக்களை கொண்டாடினார்கள்.

    தகவலுக்கு வருவோம் நிலா தேய்பிறை முடிந்து வளர்பிறை ஆரம்பிக்கும் போது நிலா ஒளியின் பிரகாசம் மிகையாக இருக்கும்.

    அந்த நாட்களில் விழாக்களை வைக்கும் போது ஒளியிற்கான தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது அல்லவா.

    அதனால் பண்டைய மக்கள் வளர்பிறை நாட்களுக்காக காத்திருந்து விழாக்களை கொண்டாடுகின்றனர்.


    அதை இன்றைய காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையாக ஆக்கி ஒரு பொருளை எடுத்து வேற ஒரு இடத்திற்கு வைக்கவும் வளர்பிறை நாட்களை தேடுகின்றனர்.

    சகுணம் சரியில்லை என்று ஒரு மூட காரணத்தை முன்வைக்கின்றனர்.

    இன்று தான் ஒளிக்கான தேவை எவ்வளவோ மிகையாகிறது. எதற்கு வளர்பிறை வேண்டும் எமது பண்டைய மக்கள் மிகவும் புத்திசாலிகள்,

    அவர்கள் செய்ததை இன்றைய கால மக்கள் அதை மூடநம்பிக்கைக்காக பயன்படுத்துகின்றனர்.

    பண்டைய வரலாறு அறிபவர்கள் இவ்வாறான மூடநம்பிக்கையில் இருந்து விலகிசெல்வார்கள்.

    பௌர்ணமி நாளில் கோவில்களில் பெரிதாக விழாக்கள் கொண்டாடுகின்றனர் காரணம் என்ன,
    பண்டைய மக்கள் பௌர்ணமி நாளில் ஒளியின் அளவு அதிகமாக இருப்பதால் கோவில் விழாக்களை கொண்டாடினார்கள்.


    ஆனால் எம் மக்கள் அதெல்லாம் அறியாமல் பௌர்ணமி நாள் தெய்வீகமான நாள் அப்படி இப்படி பல புனைகதைகளை உருவாக்கி மூடநம்பிக்கையில் மூழ்கிவிட்டார்கள்.

    பண்டைய தமிழன் செய்த ஒவ்வொரு செயலிலும் அறிவியல், பல நன்மைகள் காணப்படுகின்றன.

    பண்டைய வரலாறு அறிவோம் மூட நம்பிக்கைகளை ஒதுக்குவோம்.

    Sunday, 8 December 2013

    சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது !!

    By: ram On: 22:08
  • Share The Gag


  • இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....!


    தெரியாதோர்க்கு....


    தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.


    விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!


    முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

    சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.


    சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.


    ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

    Tuesday, 3 December 2013

    பொன்மொழிகள்!

    By: ram On: 23:32
  • Share The Gag

  • * துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான். 


    —தாமஸ். 



     * தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி


    . —லெனின். 



     * பிறருடைய அன்புக்

                                            பொன்மொழிகள்! Click

    Monday, 2 December 2013

    ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!

    By: ram On: 17:05
  • Share The Gag

  • ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது

     ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!




    கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்,


    அரசனே ஆனாலும் கூட



     அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்

     என்பதுதான் உண்மையான அர்த்தம்…



    1) ஆடம்பரமாய் வாழும் தாய்,



    2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,



    3) ஒழுக்கமற்ற மனைவி,



    4) ஏமாற்றுவதும் துரோகமும்


     செய்யக்கூடிய உடன்


     பிறந்தோர் மற்றும்



    5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


     என்பதாகும்..