Monday 1 September 2014

Tagged Under:

ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? - எடை குறைய என்ன வழி?

By: ram On: 22:55
  • Share The Gag

  • 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்!

    ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடையைக் குறைக்க வைத்தீர்கள்? திடீரென அதிக எடையைச் சில மாதங்களிலேயே குறைப்பது ஆரோக்கியமானதுதானா?'' - ரியாலிட்டி ஷோவின் பயிற்சியாளரும், விளையாட்டு மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தியிடம் கேட்டோம்.

    ''இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், முழு ஈடுபாட்டுடன் காலை முதல் இரவு வரை பயிற்சியில் ஈடுபட்டதால்தான் குறைந்த நாட்களில் எடையைக் குறைத்தது சாத்தியமானது. மற்றவர்களால் இதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்ய முடியாது. அவர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதேகூடச் சிரமம். மேலும், வேலை, குடும்பம் எனப் பல காரணிகள் இருப்பதால், அவர்களால் உடனடியாக எடையைக் குறைக்க முடியாது. இத்தனை செயல்பாடுகளுக்கும் இடையில், உடனே எடை குறைய வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவதும் தவறு.

    400 மீட்டர் கூட நடக்க முடியாதவர்களை ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கி.மீ வரை பயிற்சியில் நடக்கவைக்க முடியும். அதற்கு, வெறும் உடல்வலிமை மட்டுமில்லை... மனவலிமையும் தேவை. உடல் எடையைக் குறைக்க முயற்சியும், முறையான பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் போதும். இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களைப் பார்த்து, ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, நான்கு நாட்கள் நடந்துவிட்டு, உடல் எடை உடனே குறையவில்லை என வீணாகப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

    பொதுவாக உடல் எடை நமது உயரத்துக்குச் சரியாக இருக்கிறதா என்பதைப் பி.எம்.ஐ (ஙிவிமி) கொண்டு கணக்கிடுகிறார்கள். பி.எம்.ஐ அளவீடானது 30-க்கு மேல் இருப்பின், அவர்கள் ஒபிசிட்டி நோயின் தாக்கத்தில் இருக்கின்றனர் என்று அர்த்தம்.

    உடல் எடை அதிகமாக இருப்பவர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சிறிதளவு எடை அதிகமாக உள்ளவர்கள், தொப்பை விழும் அளவுக்குப் பருமனானவர்கள், ஒபிசிட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதில், ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இவர்கள், தினமும் 1/2 கி.மீ தூரம்கூட நடக்க மாட்டார்கள். முறையாகத் தொடர்ந்து 1 - 2 கிலோ மீட்டர் நடந்தாலே, உடல் எடை பெருமளவு குறையும். மேலும், உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்குக் கடும் உடலுழைப்புத் தேவை. இவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் நீரின் அளவு எளிதில் குறைந்துவிடும். ஆனால், இது பி.எம்.ஐ 25 முதல் 30-க்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. இவர்கள் ஒபிசிட்டி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக அளவு பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைத்து பி.எம்.ஐ. 30-க்குள் கொண்டுவர வேண்டும். இப்படி, கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை மேலும் குறையும்.

    ஒவ்வொருவருக்கும், அவரவர் உடல் எடையின் அளவைப் பொறுத்து, செய்ய வேண்டிய உடற்பயிற்சியின் அளவும் மாறுபடும்.

    0 comments:

    Post a Comment