Thursday 7 August 2014

Tagged Under: ,

நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!

By: ram On: 08:01
  • Share The Gag

  • நயன்தாரா என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர். சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று நின்றது.

    தற்போது ஆர்யாவை காதலிக்கிறார் என்று பல பிரச்சனைகள் இவரை சுற்றினாலும் இதை பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.

    ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். தற்போது அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம்.

    இதில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கயிருக்கிறார், பல நடிகைகள் நடிக்க தயங்கும் அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடிக்க சம்மதித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    0 comments:

    Post a Comment