Tuesday 10 September 2013

Tagged Under:

நன்றி மறப்பது நன்றன்று.........குட்டிக்கதை

By: ram On: 22:19
  • Share The Gag



  • கண்ணனும் ...முருகனும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள் கடற்கரைக்குச் சென்ற இவர்கள்..மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..அப்போது நடைபெற்ற விவாதத்தில் முருகனின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை உண்டாக்க..அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான் கண்ணன்.

    அடியை வாங்கிக்கொண்ட முருகன்..சற்று நேரம் திகைத்துவிட்டான்.பின் கடற்கரை மணலில் 'கண்ணன் என்னை அடித்தான்' என எழுதினான்.

    பின் இருவரும் மௌனமாக வீடு திரும்பினர்..அப்போது வேகமாக வந்த கார் ஒன்று முருகனை இடிக்குமாறு வர..உடனே கண்ணன்...முருகனை இழுத்து..நடக்க இருந்த விபத்தை தவிர்த்தான்.

    நன்றியுடன் முருகன்...பக்கத்தில் இருந்த கல் ஒன்றை எடுத்து..பெரிய பாறாங்கல் ஒன்றில் 'இன்று கண்ணன் என் உயிரைக் காப்பாற்றினான்' என செதுக்கினான்.

    இதைக் கண்ட கண்ணன்..'நான் உன்னை அடித்ததை மண்ணில் எழுதினாய்..காப்பாற்றியதை கல்லில் எழுதினாயே..ஏன்'என்றான்.

    அதற்கு முருகன் ..'ஒருவர் செய்த தீங்கை மணலில் எழுதினால் ...அதை அடுத்த நிமிடம் காற்று கலைத்துவிடும்...அதே வேளையில் செய்த நன்மையை கல்லில் எழுத ..அது அழியாமல் என்றும் நிற்கும்'என்றான்.

    ஒருவர் செய்த தீமையை உடனே மறந்து விடவேண்டும்.அதே வேளையில் அவர்கள் செய்த நன்மையை என்றென்றும் மறக்கக்கூடாது என்பதையே இச் செயல் நமக்கு தெரிவிக்கிறது.
     

    0 comments:

    Post a Comment