Sunday, 21 September 2014

நண்பேன்டா படப்பிடிப்பில் பயங்கர விபத்து! ஷுட்டிங் நின்றது

உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் படம் நண்பேண்டா. இப்படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது.

இதில் ஷெட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அப்போது எதிர்பாரத விதமாக இந்த கிரேன் சாய கீழே நின்று கொண்டிருந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment