Monday, 3 November 2014

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா??????

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?

அல்வா - To cheat
ஆத்தா - Mother
அபேஸ் - Loot adiththal
அல்பம் - A silly/cheap dude
அண்ணாத்தே - The elder brother
அண்ணி - Anna's figure
அப்பீட்டு - Unsuccessful
அசத்தல் - Kalakkal
பஜாரி - A not-so-friendly figure

பந்தா - Pillim
பேக்கு - Fool
பாடி - Muscular Machi
சித்தீ - Aunty Figure
டப்ஸா/டூப் - Lie
தேசி குஜிலி - An Indian figure in US
தில் - Courage
தூள் - Super
தம் - To smoke
டாவு - Site seeing

டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)
டமாரம் - Deaf
டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl
ப்ரீயா வுடு மாமே - Forget it
காலி - Appeettu
குஜிலி - Figure
குரு/தல - Head of the gang
குஜால்ஸ் - Having fun with Gujilis
கானா - Rap song sung by Machis
கலீஜ் - Dirty

கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from
ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)
ஜொள்ளு - Bird watching
ஜில்பான்ஸ் - Gujaals
ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.
ஜுஜிபி - Easy
ஜில் - An exclamation on seeing a Takkar figure
ஜல்சா - Same as Gujaals
காட்டான் - Uncivilized/ Rude Machi
கேணை - Idiot
கிக்கு / மப்பு -Intoxicated/under influence

கலக்கல்ஸ் - To cause a flutter
கேணை பக்கிரி - Friend of ushar pakri
கிண்டல் - To make Fun
காக்கா அடிக்கிறது - Putting soaps to someone
கே.எம்.எல். - Kedacha Mattum Labam
குட்டி - Figure
குடும்ப பிகர் - Homeloving Gujli
குடும்ப பாட்டு - A song with which machis identify themselves
குள்ளுஸ் - A short machi
லட்டு - Allva

லூட்டு -to steal
மாம்ஸ் - One cool dude
மாங்காய் - Fool
மச்சி - Maams
மண்டை - A sharp guy
மேரி - feminine of Peter
மாவு - refer O B.
நச்சுன்னு - Bull's eye
நம்பிட்டேன் - I don't believe you
நாட்டு கட்டை - A well-built village figure
நாட்டான் - Villager

நாமம் - To cheat
நைனா - Father (courtesy Telugu)
கடலை - Machi talking to a Gujili or vice versa
ஓபி - To waste time
ஒண்ணரை அணா - Worthless
பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli
பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in
ஹை-பி - english
பத்தினி - A figure who goes around the block
பக்கிரி - A shrewd dude
பேட்டை - Area
பிசாத்து - Cheap
பிலிம் - Show-off

பீலா - To lie
ராம்போ - A manly figure
சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time
சொங்கி - Lazy
சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick
(courtesy Movie:Thevar Magan)
டக்கர் பிகர் - Semma figure
தண்ணி - Liquor
தலைவர் - Leader
டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)
உஷார் பக்கிரி - Smart pakri
வெண்ணை - Fruit
வெயிட் பிகர் - A very attractive/rich figure
ராங்கு காட்டுறது -Acting indifferently

தமிழகராதியில் இல்லாத சொல்லுக்கு விளக்கம்

டகால்டி
திருட்டுத்தனம்

இந்த‌ சொல் தமிழகராதியில் இல்லை. Dacoity என்ற ஆங்கிலச் சொல் மருவி டகால்டி என்று வழங்கப்படுவதாக (அம்பட்டன் வாராவதி போல) கேள்விப்பட்டிருக்கிறேன். Dacoity என்றால் அதாவது கூட்டமாக கொள்ளை அடித்தல் என்று தெரிகிறது.
பல்கலை அகராதியில் இதற்கு தீவட்டிக்கொள்ளைக்காரன் என்று பொருள் உள்ளது. எனவே ‘டகால்டி வேலை' என்றால் ‘திருட்டுத்தனம்’என்று கொள்ளலாம்.

டப்பா
இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு தமிழ்ப்பாட்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.

நான் கூட 'டப்பா டான்ஸ் ஆடிரும்' என்றால் சும்மா 'எகனை மொகனை' ஆக சொல்லப்பட்டது என்று நினைத்தேன். டப்பா என்பதற்கு பொருளே ஒரு வகையான 'எசப்பாட்டு' என்று தெரிகிறது.
அதனால் 'டப்பா டான்ஸ் ஆடிருச்சு' என்று சொன்னால் தப்பே இல்லை.

குஜிலி
பெண், குஜராத்தி, குஜிலிக்கடை
- அந்திக்கடை

குஜிலி என்னும் சொல் பொதுவாக
அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

டங்குவார்
குதிரையைப்பிணிக்கும் தோற்பட்டை

ட‌ங்குவார் அந்து போச்சு
‘டங்குவாரறுதல்’
என்ற‌ சொல் அப்படியே அக‌ராதியில் இருக்கிற‌து. ‘வேலை மிகுதியாற் களைத்துப் போதல்’ என்ற‌ பொருள் ‘டங்குவாரறுதல்’க்கு உள்ள‌து. அதிக‌ வேலை செய்து நொந்து போன‌வ‌னை இங்க‌ன‌ம் நையாண்டி செய்த‌ல் சென்னைய‌ர் வ‌ழ‌க்க‌ம். குதிரையின் தோற்ப‌ட்டை அறுத‌ல் என்று‌ம் இத‌ற்குப் பொருள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

சோமாறி
பொருள் : சோம்பேறி

‘ஏனாதிப‌ர்வகை’ என்றும் சோமாறி எனும் சொல் குறிக்க‌ப்ப‌டுகிற‌து. இங்கு ‘ஏனாதி’ என்றால் வட ஆர்க்காடு, நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியினரைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.

ஏனாதி என்றால் நாவிதன், புறம்போக்கு, ப‌டைத்த‌லைவ‌ன், ம‌ற‌வ‌ன், என்று ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொருள் கிடைக்கிற‌து.

பன்னாடை
பொருள் : மூடன்

கீசிடுவேன்
பொருள் : கிழிச்சிடுவேன் என்பதே இங்கனம் மருவியது.

தாராந்துடுவே
தாரா என்ப‌து விண்மீன், வாத்து, ஒருவ‌கை நாரை என்ப‌ன‌வ‌ற்றையெல்லாம் குறிக்கிற‌து என‌த் தெரிகிற‌து. இதற்கும் ‘தாராந்துடுவே’க்கும் சம்பந்தம் இல்லையென்றும் தெரிகிறது.

தாரன் என்பது உடையவனைக் குறிக்குஞ் சொல்; வார்சுதாரன். என‌வே, தாராந்துடுவே என்று திட்டப்படுதல் வாரிச‌ற்றுப் போகும் ஒரு நிலையை நினைவுப‌டுத்தும் என்று ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌லாம்.

இந்தியில் ‘டர்’ என்றால் பயம். ‘டர் ஆயிட்டான்பா’ என்று பயந்து போனவனைச் சொல்வது வழக்கம். தாராந்துடுவே இதிலிருந்து வந்திருக்கலாம்.

வீட்டாண்டை
அண்டை என்பது பக்கத்தில், சமீபத்தில் என்று பொருள் தரும் ஒரு சொல். எனவே கடையாண்டை, வீட்டாண்டை என்று குறிப்பிடப்படுவதை கொச்சை என்று சொல்ல இயலாது. ஆனால் வூட்டாண்ட‌, கோயிலாண்ட‌, க‌டியாண்ட‌ என்று சொல்வ‌தெல்லாம் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

டபாய்த்தல் (மூலம் : இந்தி)
பொருள் : ஏமாற்றுதல் மற்றும் பரிகசித்தல் (நக்கல்) என்று பொருள் சுட்டப்பட்டுள்ளது.

பேமானி (மூலம் : உருது)
பொருள் : நாணமற்றவன.

மொள்ளமாறி (முல்லைமாறி)
முடிச்சவிக்கி, (முடிச்சவிழ்க்கி)
முடிச்சுமாறி

இம்மூன்று சொற்களுமே ஒரே பொருள் தருவன என்று அகராதியில் காட்டப்பட்டுள்ளது. மூட்டை போன்றவற்றின் முடிச்சை அவிழ்த்துத் திருடும் திருடனைக் குறிக்கும் சொற்களாகும்.

கேப்மாரி, கேப்பமாறி
பொருள் : திருடன்

‘கேப்பை’ என்பதற்கு ‘ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற் பிழைக்கும் தெலுங்கச்சாதியார்’ என்று பொருள் கிடைக்கிறது. எனவே இச்சொற்கள் திருடுபவனைக் குறிக்கின்றன.

பிகில்
பொருள் : சீட்டியடித்தல்

பீச்சாங்கை
இது ‘இடது கை’ என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கசுமாலம்
பொருள் : ஆபாசம், ஒழுக்கக்கேடு
கசுமாலர் :அசுத்தர்
கசுமாலி : அசுத்தமுள்ளவள், சண்டைக்காரி

கசுமாலம் என்பது கஸ்மாலம் என்றும் பிரயோகிக்கப்படுவதால் இதுவும் உருது மொழி மூலம் உடையது என்று பலர் எண்ணலாம். ஆனால் இது ஒரு தமிழ்ச்சொல் (அல்லது வட‌ மருவல்) என்று தெரிகிறது (உபயம் : திருப்புகழ், சொல் : கசுமாலர்)

சாவுகிராக்கி (மூலம் : உருது)
கிராக்கி (உருது) என்பதற்கு அதிகவிலை என்று பொருள். சாவுகிராக்கி என்பது பிணத்தின் முன் நின்று பேரம்பேசும் இழிமையைக் குறிக்கிறது.

பேஜார்
பொருள் : சோர்வு, தொந்தரவு

மாஞ்சா (உருது)
மாஞ்சம் (தமிழ்) : மாமிச‌ம்
பொருள் : காற்றாடிக்கயிற்றில் தடவுதற்குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின்வகை

‘நெஞ்சிலேகீற மாஞ்சாசோத்தை தோண்டி எடுத்துருவேன்’

(நெஞ்சைப் பிள‌ந்து இத‌ய‌த்தை தோண்டி எடுக்கும் கொடூர‌த்தை எவ்வ‌ள‌வு அழ‌காக‌ச் சொல்கின்ற‌ன‌ர் சென்னைத் த‌மிழில்)

புருடா
பொருள் : ப‌ய‌முறுத்துத‌ல்

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்!

 

இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.

பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.

நமது பிரபு தேவா முதல் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல் மாடல் இவர் என்றால் மிகையல்ல, பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இன்று இவர் நடனத்தின் பாதிப்பு இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்ப சிரமம்.

தனது 9 வயதிலேயே ஆட்டத்தை துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம் உயர்த்த வைத்தவர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. அப்போது இது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த ரசிகர்களாக மாற்றி காட்டியவர். நான் வெறிப்பிடித்த என்று கூறியது மிகைப்படுத்த பட்ட வார்த்தை அல்ல, சொல்ல போனால் அதை விட மிக குறைவான வீச்சை தரும் வார்த்தையே.

மைக்கேல் அரங்கில் வந்தால் ஆர்வம் தாங்காமல் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழும் ரசிகர்கள் கோடிக்கணக்கானவர்கள், மிகைப்படுத்தவில்லை. அவர் அரங்கில் ஆடும் போது முதலில் மெதுவாக ஒவ்வொரு ஸ்டெப் ஆக வைப்பார் ஆனால் அது வரை கூட தாங்க முடியாத ரசிகர்கள் அவரை ஆடக்கூறி கதறி அழுவார்கள், இதை நம்மில் பலர் பார்த்து இருக்கலாம் ஒரு சிலர் இதை போல காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம்

எடுத்துக்காட்டிற்கு மைக்கேல் தனது ரசிகரிடம் நீ இவனை கொன்று விடு என்று கூறினால் பதில் கேள்வி கேட்காமல் செய்யக்கூடிய அளவிற்கு காட்டுத்தனமான ரசிகர்கள். ஒருவரை இந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றால் மைக்கேல் எத்தனை பெரிய திறமைசாலியாக மக்களை கவருபவராக இருந்து இருக்க வேண்டும். இதில் வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லை. அனைவரையும் தனது இசையால் நடனத்தால் கட்டிப்போட்டவர். இவருக்கு தாறுமாறான பெண் ரசிகர்கள், இவர் பெண்கள் கூட்டத்தில் சிக்கினால் தனி தனியாக பிய்த்து விடுவார்கள், இவர் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். இவரின் ஒரு அசைவிற்காக கண்ணீருடன் காத்து இருப்பவர்கள், இவரின் ஆட்டத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு மயக்கமடைந்து விடுமளவிற்கு வெறித்தனமானவர்கள்

அவருடைய த்ரில்லர்(1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41 மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலக சாதனை அடைந்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர், இவருடைய பல நடனங்கள் குறிப்பாக காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது), தொப்பி அணிந்து கண்களை மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது. நம் ஊர் மேடையில் ஆடுபவர்கள் கூட இதை போல செய்வதை பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை மட்டுமல்லாது தனது உடைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார், ராணுவ உடை, வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஆல்பங்கள் எடுத்த விதம் மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத முறையில் கலக்கலான கிராபிக்ஸ் ல் இருக்கும்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவரது மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்கு பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து ஏற்பட்டு காயங்கள் ஆனது, இதற்க்கு பெரும் நஷ்ட ஈடு பெற்றார் ஆனால் அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார், அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை வெள்ளையாக மாற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக! மாறினார். பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும், இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம் இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் இந்த நிலைக்கு காரணமே இந்த தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார், இதற்க்கு பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாக கொடுத்தார், இதை போல செலவுகள் அவரை பெரும் சிக்கலில் தள்ளியது. சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்ய பணம் வாங்கி விட்டு அவர் அதை செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள், பிறகு உலகையே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார், உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் பெயர் உட்பட தன்னை மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே நினைத்தது, இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தற்போது கூட "இறுதித் திரை" என்று நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தார், இதற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இறுதி திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார் என்பது பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய நிகழ்ச்சி. கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும் வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
       
மைக்கேல் இறந்த போது அவருக்கு BBC கொடுத்த முக்கியத்துவம் நான் எதிர்பாராதது, ஒரு நாள் முழுக்க வேறு எந்த செய்தியும் இல்லாமல் அவர் சமபந்த்தப்பட்ட விசயங்களையே கூறிக்கொண்டு இருந்தார்கள். இவர் இறப்பு செய்தியால் சோசியல் தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் BBC செய்தி தளங்கள் அதிக வருகையாளர்களால் திணறி விட்டன. தளங்களின் சர்வர்கள் திடீர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்து விட்டன. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல மைக்கேலை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள மற்றும் விவரங்களை அறிந்து கொள்ள ஓட்டு மொத்தமாக பார்வையாளர்கள் கூகிள் தேடுதலை நாடிய போது, கூகிள் தளமே ஸ்தம்பித்து விட்டது, தங்கள் தளத்தை திட்டமிட்டு தாக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் அளவிற்கு பயந்து விட்டதாக கூகிள் நிறுவனம் கூறி உள்ளது.

மேற்க்கூறியதே போதும் மைக்கேல் ஜாக்சனின் புகழை நிரூபிக்க, அவர் எந்த அளவிற்கு உலகில் மிக முக்கியமான நபராக விளங்கி இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்ட. பிரபலம் ஆவது பெரிய விசயமில்லை ஆனால் அந்த பிரபலம் எப்படி மக்களை கவர்ந்து இருக்கிறார் என்பதே பெரிய விஷயம், அதில் மைக்கேல் எந்த நிலை என்று யாரும் கூறி தெரியவேண்டியதில்லை.

மைக்கேலின் மீது பல குற்றசாட்டுகள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த திறமையாளர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உலகில் இனி இவரை போல பலர் வரலாம் ஆனால் எவரும் இவர் புகழை பெற மற்றும் மிஞ்ச முடியாது என்பது திண்ணம். மைக்கேலை பற்றி ஒரு இடுகையில் கூறி விட முடியாது அவ்வளவு சிறப்புகளை கொண்டவர், ஒரு ரசிகனாக அவருக்கு இந்த பதிவு சமர்ப்பணம். தனது கடைசி காலத்தில் பல இன்னல்களை சந்தித்த அவர் இனி அமைதியாக உறங்க பிராத்திப்போம்.

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!

 

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.

அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.

இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி. சீரியல்ல நல்ல நடிக்காத ஆட்களை அறைய முடியுமே – ஐ ஜாலி ஆனா ஃபேஷன் டிவி ஓடும் போது கை கவனம்

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?



 மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம்.

1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும்.

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.

4. இப்போது  Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும்.

5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும்.

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும்.

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில்  தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள்.

8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தவகல் !!!

 

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழ-கு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், ராணி எப்போதும் சோகமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், அரசரே மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது என்றார்.

இதனைக் கேட்ட மன்னன், கவலைப்பட வேண்டாம் ராணி, உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார். அரசவையினைக் கூட்டி, பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ஏதேனும் வழி உள்ளதா என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.


அதில் வயதான ஒருவர், மன்னரே, பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். மாளிகையினருகில் ஏராளமான மரங்களும் வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும். அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்றார். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார் மன்னர்.

ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்-பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்-பட்டன. வானத்தைத் தொடுவதற்குப் போட்டி-யிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடி-களிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறை-யில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.

யூப்ரடீஸ் நதியிலிருந்து ஹைட்ராலிக் என்ஜின்மூலம் நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநரகளின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ்-பெற்றதாகும்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 400 இல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதினார். பாக்தாத்துக்குப் பக்கத்தில் கி.மு. 600 ஆம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி.

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.

இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.

ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை தூவிட்டு தளங்களுக்குள் நுழைந்துவிடும் கில்லாடிக்கு கில்லாடிகளும் இருக்கவே செய்கின்ற‌னர்.
கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிபுணர்களும் புதிய பாதுகாப்பு வழிகளை உருவாக்கி கொண்டே இருக்கின்றனர்.
பொதுவாக இத்தகைய சாப்ட்வேர்களும் பாதுகாப்பு வழிகளும் ஹைடெக்காக இருக்குமே தவிர சுவாரஸ்யமானதாக இருக்க வாய்ப்பில்லை.ஒரு பயர்வால் செயல்ப‌டும் விதம் பற்றி அறிய யாருக்கு ஆட்வம் இருக்கும் சொல்லுங்கள்.

 ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில் அறிமுகமாகியுள்ள பாதுகாப்பிற்கான புதிய சாப்ட்வேர் கொஞ்ச‌ம சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.அந்த சாப்ட்வேர் செயல்படும் விதம் அட என வியக்க வைத்து புன்னகைக்கவும் வைக்கிறது.


 பொதுவாக் எல்லா பாதுகாப்பு சாப்ட்வேர்களும் கம்ப்யூட்டர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்துவதில் கவன்ம் செலுத்துகின்றன என்றால் மைகோனோஸ் என்னும் இந்த புதிய சாப்ட்வேர் கம்ப்யூட்டர் திருடர்களையும் கொள்ளயர்களையும் உள்ளே அழைத்து அதன் பிறகு அவர்களுக்கு போக்கு காட்டி வெறுப்பேற்றி களைப்படைய வைத்து விட்டால் போதும் என புற முதுகிட்டு ஓட வைக்கிறது.
மற்ற சாப்ட்வேர்கள் பூட்டு போல செயல்ப‌டுகின்றன என்றால் இந்த சாப்ட்வேரோ இல்லாத ஒரு கதவை உருவாக்கி அதன் வழியே கம்ப்யூட்டர் திருடர்களை நுழைய வைத்து அவ‌ர்களுக்கு தவறான தகவல்களாக அள்ளிக்கொடுத்து குழப்பி விடுகிறது.

மைகோனோஸ் சாப்ட்வேர் இதனை செய்யும் விதம் கச்சிதமானது.ஒரு விழிபான காவலாளி போல இது திருடர்கள் யாரேனும் அத்துமீறி நுழைய முயல்கின்றனரா என்பதை சரியான நேரத்தில் கண்டு பிடித்து உஷாராகி விடுகிற‌து.
அனால் அதன் பிறகு அவசரப்படாமல் திருடனோடு மல்லுக்கட்ட தயாராகிறது.உடனே அது பொய்யான பாஸ்வேர்டுகளை எடுத்து சம‌ர்பிக்கிறது.மேலும் திருட்டு ஆசாமி தளத்திற்குள் முன்னேறி செல்வது போன்ற உண‌ர்வை ஏற்படுத்தி அங்கும் இங்கும் அல்லாட‌ அவைக்கிறது.

வழக்கமாக ஒரு மணியில் முடிய வேண்டிய வேலையை பல மணி நேரத்திற்கு இழுத்தடிக்கிறது.அதன் பிறகு பார்த்தால எல்லாம் போலியான தகவல்கள் என்ற உண்மை திருடனை வெறுப்பேற்றும்.
இப்படி திருட வந்த கில்லாடியின் உழைப்பை விரையமாக்கி இந்த சாப்ட்வேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்.திருடனும் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் வேறு தளம் பார்க்க சென்று விடுவார்.அதற்குள் ஊடுருவ முயன்ற ஆசாமியின் அடையாளத்தை அறிய உதவக்கூடிய தகவல்களை இந்த சாப்ட்வேர் சேகரித்து விடும்.

கம்ப்யூட்டர் திருடர்களை தடுக்க எவ்வளவு தான் பாதுகாப்பான‌ வ‌ழியை உருவாக்கினாலும் அதனை உடைக்ககூடிய வழியை கண்டுபிடித்து விடும் நிலை இருப்பதால் இந்த புதுமையான சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் மைகோனோஸ் நிறுவன தலைவர் டேவிட் கோயர்ட்ஸ்.

இந்த சாப்ட்வேர் கப்ம்யூட்டர் திருடர்களின் முயற்சியை வீண‌டித்து அந்த செயலுக்கான பயனையே கேள்விக்குள்ளாக்கி விடுவதாகவும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார்.
சாப்ட்வேரும் கூட சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்கிறார்.

'விஸ்வரூபம் 2'-ல் என்ன பிரச்சினை? - கமல் விளக்கம்

 'விஸ்வரூபம் 2' படம் வெளியாவதில் தாமதம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

அதனைத் தொடர்ந்து 'விஸ்வரூபம் 2' எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தெரிந்தது. அப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்', ஜூது ஜோசப் இயக்கத்தில் 'பாபநாசம்' என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல்.

மூன்று படங்களுமே எப்போதும் வெளியாகும் என்ற கேள்விக்கு கமல் கூறியிருப்பது, " 'விஸ்வரூபம்' முதல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன். எனவே அதன் வெளியீட்டிற்கு காத்திராமல், லிங்குசாமியோடு பேசியவுடன் 'உத்தமவில்லன்' படத்தை துவக்கினோம். 'பாபாநாசம்' கதை சுவாரசியமாக இருந்ததால் அதையும் ஒப்புக்கொண்டேன். தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டன.

'விஸ்வரூபம் 2'-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்கவேண்டியுள்ளது. ஒரு படம் துவங்கும் முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அப்படத்தின் விதியை எந்த அமானுஷ்ய சக்தியும் தீர்மானிப்பதில்லை" என்று கூறியுள்ளார்

இதுவரை யாரும் பார்க்காத டெல்லியில் ஜெய் ஆண்ட்ரியா

எங்கேயும் எப்போதும் மற்றும் இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன், தற்போது ஜெய்-ஆண்டரியாவைக் கொண்டு வலியவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார், இந்த படத்துக்காக தற்போது டில்லியில் முகாமிட்டிருக்கிறார். அங்குள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இறுதிகட்ட காட்சிகள் படமாகிறதாம். இதுபற்றி அவர் கூறுகையில், படத்தின் கதைக்கும், காட்சிக்கும் தேவையான லொகேசன்களை தேடிப்பிடித்து படமாக்கி வருகிறேன்.

அந்தவகையில் டில்லியில் இதுவரை யாரும் படமாக்காத சில அனுமதி கிடைக்காத பகுதிகளிலும் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்துகிறேன் என்று கூறும் சரவணன், இந்த வலியவன் வலுவான கதையில் உருவாகிறது. முக்கியமாக சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வருகிறது என்கிறார்.

ஸ்டுடியோ 9 மூட விஜய் சேதுபதி தான் காரணமா?

தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களின் தயாரிப்பிலும், விநியோகத்திலும் பங்கு வகிக்கும் பிரபல நிறுவனம் ஸ்டுடியோ 9. இந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனம் மூட காரணம் பிரபல நடிகர் விஜய் சேதுபதி என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்நிறுவனம் விஜய்சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பெரிய ஒரு தொகை முன்பணமாக கொடுத்துள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி ஒப்புக் கொண்ட படி அந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை அதோடு வாங்கிய முன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால் பலத்த பண நெருக்கடிக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டிருப்பதால் இந்த நிறுவனத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளனராம். இதனை இந்த நிறுவன நிர்வாகத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்துள்ளனர்.

தனுஷுடன் பேரம் பேசும் இந்தி தயாரிப்பு நிறுவனம்..! காக்கவைக்கும் தனுஷ்..!

கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் ஓகே கண்மணி. இப்படத்தின் இந்தி பதிப்பில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்த உள்ளது.

தனுஷ்க்கு ரஞ்சனா வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் ஷமிதாப் படம் வெளிவந்தால் அவருடைய மவுசு இன்னும் எகிறிவிடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் தற்போதிலிருந்து பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

உலக அரங்கில் விஜய் சேதுபதி படம் திரையிடப்படுகிறது..!

எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியான திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் முதலானோர் நடித்திருந்தார்கள்.

அதோடு இப்படம் விமர்சன ரீதியாக பேசப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விரைவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா உலக அளவிலான பல மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

இந்த விழாவில் விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ தமிழ் படமும் திரையிடப்படுகிறது.

என்ன கண்ட படி திட்டுங்க சார் - அர்ஜுனிடம் அஜித் சொன்ன சுவாரசிய தகவல்

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் பல படங்களில் நல்லவராக நடித்தாலும் அவரை வில்லனாக காட்டிய படம் மங்காத்தா.

இப்படம் வெளிவந்து சக்கைபோடு போட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அஜித் கூட நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் அர்ஜுன் அவர்கள் தெரிவித்தார் .

அதாவது அஜித் மாதிரி ஒரு நல்ல கலாச்சாரமிக்க மனிதரை பார்க்க முடியாது, முதலில் இப்படத்துக்காக என்னிடம் அணுகிய போது அஜித் அவர்களே வந்தார், இது என்னுடைய 50வது படம் கதை கேட்டு உங்களுக்கு பிடித்தால் மட்டும் பண்ணுங்க என்றார்.

அது மட்டுமில்லாமல் சண்டை காட்சிகளில் என்னை கண்ட படி திட்டுங்க சார் அப்போ தான் பவர் ரா இருக்கும் என்ற திட்டை கேட்டு வாங்கினர். அவருடைய சமையல் கலை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும் என்று தெரவித்தார்.

கத்தி திருடிய கதையா? முதன்முறையாக மனம் திறந்த முருகதாஸ்

பல எதிர்ப்புகளை தாண்டி சமீபத்தில் வெளியானது விஜய்யின் கத்தி. படம் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை ஒரே பிரச்சனை தான், முதலில் லைகா பிரச்சனை, தற்போது கதை திருட்டு என்று ஒரே மன கஷ்டத்தில் உள்ளார் முருகதாஸ்.

இதை பற்றி முதன்முறையாக பிரபல நாளிதழில் பேசியுள்ளார். கத்தி கதை என்னுடையது, கோபி என்பவரை இது நாள் வரை நான் பார்த்தது இல்லை. சரி அப்படி என்னை தெரியும் என்று சொல்லும் அவருக்கு என்னுடைய தொலைபேசி எண் கூட அவரிடம் கிடையாதா? பண பறிப்புக்காகவே இது போல் சம்பவங்கள் நடைபெறுகிறது.

துப்பாக்கி படம் எடுத்த சமயம் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை எடுத்த ஒரு தயாரிப்பாளர் எடுத்தார், பிறகு எங்களிடம் படத்தின் தலைப்பில் பிரச்சனை செய்து கடைசியில் 19 லட்சம் கொடுத்த பிறகு சமாதானத்துக்கு வந்தனர்.

தற்போது இதுபோல் எல்லாருக்கும் காசு கொடுத்து ஊக்குவித்தால் படம் எடுப்பவர்கள் எங்கே போவார்கள. இப்பிரச்சனை வந்ததுமே நான் தயாரிப்பாளரிடம் ஒரு விஷயத்தை உறுதியாக தெரிவித்தேன், எக்காரணம் கொண்டும் இது போல் பிரச்சனை செய்யும் ஆட்களுக்கு ஒரு பைசா தர கூடாது, அப்படி இல்லை என்றால் நான் விலகி கொள்கிறேன் என்று கூறினேன்.

என் பேச்சை கேட்ட தயாரிப்பு நிறுவனம் ஒரு பைசா கூட கோபிக்கு தற்போது வரை தரவில்லை. இதனாலே இந்த பிரச்சனை இவ்ளோ தூரம் வருகிறது. இப்படம் ஒரு சமுக அக்கறை கொண்ட கதை, நான் பார்த்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை எழுதினேன். இதை எப்படி அவர் உரிமை கொண்டாட முடியும். அது மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில் இப்பிரச்சனை பற்றி புகார் உள்ளது, இதனாலே தற்போது வரை நான் மௌனமாக இருந்தேன்.

கதை திருடும் அளவுக்கு நான் மூளை இல்லாதவன் இல்லை என்று ஆவேசப்பட்டுள்ளார்.