Thursday, 7 August 2014

வேலையில்லா பட்டதாரி படம் காப்பியா?


சில நாட்களாகவே தமிழ் சினிமா இந்த காப்பி என்ற வலைக்குள் சிக்கி தான் தவிக்கிறது. என்ன தான் நல்ல படம் எடுத்தாலும் இது அந்த கொரியன் படத்தின் காப்பி, அது இந்த ஈரான் படத்தின் காப்பி என்று எளிதாக சொல்லிவிடுகிறார்கள்.

தற்போது வேலையில்லா பட்டதாரி விரைவில் வரயிருக்கும் பொறியாளன் படத்தின் காப்பி என்று தகவல் கசிய இதற்கு வேல்ராஜே விளக்கம் அளித்துள்ளார்.(ஏனெனில் பொறியாளன் தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது).

இதில் பொறியாளன் படம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது, இது நாம் எடுத்துக்கொண்டு இருக்கும் விஐபி படம் போலவே இருக்கிறது என்று தான் தோன்றியது, பின் படத்தின் முழுக்கதையை கேட்ட பிறகு தான் தெரிந்தது, இது வேற கதை என்று.

படத்தில் ஹீரோ ஒரு சிவில் இன்ஜினியர், அது மட்டும் தான் ஒற்றுமை மற்றப்படி இது முற்றிலும் மாறுப்பட்ட கதை என்று விளக்கம் அளித்துள்ளார்.

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!


கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும்.

ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது.

• கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

• கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.

பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

• கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

• கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

• குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண்களுடைய கவனத்திற்கு !! இப்படி பட்ட டாக்டர்களை எங்கே புகார் கொடுக்க வேண்டும் !


ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக் கிய கவனத் திற்கு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்து வ நெறிமுறைகள் தனியா க உள்ளன. தனியார் மருத் துவமனை, தனியார் கிளி னிக்கிற்கு சிகிச்சைக்கு வ ரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்க லாம்.பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிற கு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல் ) செ ய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிட ம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய் ய வேண்டும். வயிறுவலி, கல்லீ ரல், சிறுநீரகம்போன்ற பிரச்ச னைகளுடன் பெண்கள் வருவார் கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெ ண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெ ண் நோயாளியின் வயிற்றை தொட வோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டு ம்;

புகார் கொடுக்கலாம்:

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவ றான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சி லில் பாதிக்கப்பட்ட பெண் புகா ர் அளிக்கலாம். அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண் மை என்று தெரியவந்தால், அந் த டாக்டர் மீது நடவடிக்கை எடு க்கப்படும் என்று இந்திய மருத் துவச்சங்கத்தின் தமிழக தலைவர் தெரிவித்தார்.

இயக்குனர் ஆகிறார் விவேக்! ஹீரோ வடிவேலு! உற்சாகத்தில் ரசிகர்கள்..!


தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாத காமெடி ஜோடி கவுண்டமணி-செந்தில். இவர்களுக்கு பிறகு நம்மை மிகவும் கவர்ந்தவர்கள் விவேக்-வடிவேலு.

இருவருமே சில காரணங்களால் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டனர். இந்நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் விவேக்கிடம் ‘மீண்டும் நீங்கள் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ‘ நான் தற்போது ஒரு கதை எழுதி வருகிறேன், அதில் நானும் வடிவேலும் இணைந்து நடிப்போம், கண்டிப்பாக மக்களுக்கு இது பிடிக்கும்’ என கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்... மக்களே..கவனியுங்கள்..!


அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா  வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு,  கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி,  இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம்  குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற  தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு  ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய  பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும்.  இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக  அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக  பயன்படுகிறது.எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு  குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.

அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம்  சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு  தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு  அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.

அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க  வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு,  வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.

இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு  தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில்  உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய  ஆரம்பித்திருக்கிறது.

இலைச்சாற்றில் ஆரோக்கியம் உங்களுக்காக...!


* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.

* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.

* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.

* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.

* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.

* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.

* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.

* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.

* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.

* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.

* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.

* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.

* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.

* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.

* கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வை அதிகரிக்கும்.

வெளிவராத விஜய்யின் கதாபாத்திரம்! கத்தி படத்தின் ரகசியம்!


கத்தி படத்தை பற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்காக அனிருத் இசையில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடினார்.

தற்போது அதுவல்ல விஷயம், படத்தில் இரண்டு விஜய் என்று நமக்கு தெரியும். இதுவரை வந்த போஸ்டர்களில் எல்லாம் நாம் பார்த்தது ஒரு விஜய்யின் கெட்டப் தானாம்.

வில்லன் கதாபாத்திரம் யாருக்கும் தெரியாமல், வெளியே காட்டாமல் படக்குழு மறைத்து வருகிறது, அப்படியென்றால் இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

கூர்ம முத்திரை - வாயு கோளாறு நீங்க...!


பயன்கள் :

உடலின் ஆதார சக்தியான நெருப்பைத் தூண்டி, செரிமாண சக்தியைக் கூட்ட, வாயு கோளாறு நீங்க, கேன்சர் வராமல் தடுக்கவும், ஏற்கெனவே இருப்பின் அதன் தீவிரத்தைக் குறைக்கவும் இந்த முத்திரை பயன்படுகிறது.

செய்முறை :

இடது கையில் ,வலது கையை வைக்கவும்,வலது கையின் ஆள்காட்டி விரல்,நடுவிரல், மோதிர விரலை மடக்கி, அதை இடது கையின் கட்டைவிரல், ஆள்காட்டி விரலின் நடுபாகத்தில் சுற்றியபடி வைக்கவும். கட்டைவிரல், சுண்டுவிரலை நீட்டியபடி வைத்து, இடதுகையின் விரல்களை அதே போல் வலதுகையின் மேற்புறம் வரும்படி சுற்றிப் பிடிக்கவும்.

நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!


நயன்தாரா என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர். சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று நின்றது.

தற்போது ஆர்யாவை காதலிக்கிறார் என்று பல பிரச்சனைகள் இவரை சுற்றினாலும் இதை பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.

ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். தற்போது அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம்.

இதில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கயிருக்கிறார், பல நடிகைகள் நடிக்க தயங்கும் அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடிக்க சம்மதித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜலதோஷத்தை போக்கும் துளசி ரசம்..`!


தேவையான பொருட்கள் :

துளசி இலை - ஒரு கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• துளசியை தனியாக அரைத்து  கொள்ளவும்.

• மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

• புளியை கரைத்துக் அதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.. நன்றாக கொதி வந்தததும் அரைத்து வைத்துள்ள தனியா பருப்பு கலவையை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

• கடைசியாக அரைத்து வைத்துள்ள துளசியை போட்டு நுரை வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

• இந்த துளசி ரசம் ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.