Tuesday, 4 November 2014

கதை திருட்டு பிரச்சனை தடுக்க விக்ரமன் புது முயற்சி

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பிரச்சனை கதை திருட்டு. பெரிய பிரபலங்கள் முதல் தற்போது வளர்ந்து வரும் பிரபலங்கள் வரை இந்த பிரச்சனை தொடர்கிறது.

இப்பிரச்சனை மிகவும் அதிக அளவில் பாதித்தது கத்தி படத்திற்கு தான், ஆனாலும் படம் வெளியாகி 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் இப்பிரச்சனையை தீர்க்க தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், படங்களுக்கு தலைப்பு பதிவு செய்வதை போன்று, ஒரு படத்தின் கதையையும் இயக்குநர் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம், இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கதை திருட்டை தடுக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment