Saturday, 4 October 2014

மீண்டும் சிம்ஹாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மூன்றாவது படம் இயக்கத் தயாராகிவிட்டார்.

இப்படத்துக்கு 'இறைவி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' படத்தில் அதகளம் செய்த பாபி சிம்ஹாவும், கருணாகரனும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


சி.வி.குமாரின்  திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 'ஜிகர்தண்டா' ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரி இப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment