Tuesday, 7 October 2014

தீபிகா படுகோனே சென்னை பொண்ணா?

பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோனே. இவரின் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவரயிருக்கும் திரைப்படம் ஹேப்பி நியூ இயர்.

இப்படத்தில் ஷாருக்கான், அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் புரொமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் படக்குழு சென்னை வந்திருந்தனர்.

அப்போது விழா குறித்து பேசிய தீபிகா படுகோனே, என்னுடைய சிறுவயதில் கொஞ்சகாலம் சென்னையில் வசித்ததை இப்போது நினைவுகூர்கிறேன். சென்னை மக்களின் அன்பும், கனிவும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் விழாவை அடுத்து மீண்டும் இம்முறை சென்னைக்கு வருவதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

No comments:

Post a Comment