Monday, 6 October 2014

திருமணத்திற்கு முன் குழந்தை? பதறி கொண்டு பதில் அளித்தார் - ஸ்ருதி

சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் கூறிய கருத்து ஒன்று திரையுலகத்தினர் மட்டுமில்லாமல் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு முன் எனக்கு குழந்தை வேண்டும் என்று அவர் கூறியதாக பலர் கூற தற்போது அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் இது குறித்து கேட்ட போது உடனே ‘ நான் அப்படி தான் சொல்லவே இல்லங்க, நீங்க வேற’ என்று பதறி கொண்டு பதில் அளித்தார்.

இதை தொடர்ந்து பல கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார் ஸ்ருதிஹாசன்.

No comments:

Post a Comment