Friday, 3 October 2014

அடுத்து நயன்தாராவை ஆசிரமத்திற்கு அழைக்கிறார் நித்தியானந்தா?


நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தான் நமக்கே தெரியும்.

தற்போது ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் கூட வட இந்திய கோவிலுக்கு சென்று வந்தார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஏதோ ஒரு மன விரக்தியில் தான் இருந்து வருகிறார்.

மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.

No comments:

Post a Comment