Wednesday, 1 October 2014

அஞ்சான் ஒளிபரப்பு தள்ளி வைப்பு! காரணம்?

விஜயதசமியை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுபுது படங்கள் ஒளிபரப்புவது சகஜம் தான். ஆனால் படம் வந்து 50 நாள் கூட ஆகாத நிலையில் ஒரு முன்னணி நடிகரின் படத்தை இதுவரை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது இல்லை.

தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று சென்ற மாதம் திரைக்கு வந்த அஞ்சான் படத்தை விஜயதசமி அன்று ஒளிபரப்புவதாக அறிவித்திருந்தது. தற்போது திடீரென்று அஞ்சானுக்கு பதிலாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தை ஒளிப்பரப்பயிருப்பதாக விளம்பரங்களில் காட்டப்படுகிறது.

ஏன் இந்த மாற்றம் என்றால், சூர்யா ரசிகர்கள் பலர் அந்த தொலைக்காட்சிக்கு, படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டதுக்கு இனங்க இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அஞ்சான் திரைப்படம் தற்போது வரை அந்த தொலைக்காட்சிகளிக் நம்பர் 1 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment