Thursday, 2 October 2014

உலக வரலாற்றில் முதல் முறையாக அஞ்சான்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி ஏகப்பட்ட எதிர்பார்புடன் வெளியான அஞ்சான் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளித்தள்ளியது. இந்த படம் வரும் அக்டோபர் 3ம் தேதி உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ நடித்த படம் 50 நாட்கள் கூட ஆகாத திரைப்படத்தை சின்னத்திரையில் ஒளிபரப்புகின்றனர்.

அஞ்சான் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ள சன் டிவி நிறுவனம் விஜயதசமி அன்று ஒளிபரப்புகிறது, இதனால் அன்று மக்களின் முழுகவனமும் சன் டிவியின் பக்கம் தான் இருக்கும் என்பதால் அன்று சன் டிவியின் டி.ஆர்.பி ரேட் எகிறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் இந்த விஜயதசமியில் அஞ்சான் உங்கள் வீடுகளில்…இதைப் பற்றிய உங்கள் கருத்துகளை கிழே பதிவு செய்யவும்…

No comments:

Post a Comment