Thursday, 9 October 2014

அஜித்துக்கு தெரியாமல் கௌதம் மேனன் வைத்த டுவிஸ்ட்?

தல-55 படத்தின் டைட்டில் இன்னும் வைக்காத நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் வந்து கொண்டிருக்க, தற்போது மேலும் பல சுவையான தகவல்கள் வந்துள்ளது.

சமீபத்தில் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார் கௌதம். இதில் எப்போதும் அஜித் படத்தில் பார்க்கும் கமர்ஷியல் பார்முலா இதில் இருக்காதாம். ஒரு சாமனிய மனிதன் தன் 29 வயதில் இருந்து 39 வயது வரை பயணிக்கும் ஒரு ட்ராவல் சம்மந்தப்பட்ட கதையாம்.

மேலும் இதுநாள் வரை படத்தின் கிளைமேக்ஸ் அஜித்திற்கு தெரியாதாம். அதை கௌதம் மேனனுன் தற்போதைக்கு சொல்வதாக இல்லையாம், அந்த கிளைமேக்ஸ் என்ன என்பதை அறிய, அஜித்தே மிக ஆவலாக இருப்பதாக கௌதம் தன் வழக்கமான புன்னகையால் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment