Sunday, 12 October 2014

அஜீத் 56 படம் பற்றிய தகவல்கள் - தயாரிப்பாளர் வேண்டுமாம்...!

அஜீத்தின் 55-வது படத்தின் படப்பிடிபு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளவேளையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை இயக்குபவர் சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவா. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலும் ரெடி. படத்தின் கதை, திரைக்கதை பக்காவாக தயாராகிவிட்டது.

அஜீத் படத்தைத் தயாரிக்க வேண்டுமென்றால் குறைந்தது 70 கோடியாவது வேண்டும் என்ற நிலை. காரணம் அவர் சம்பளம் மட்டுமே 50 கோடியைத் தொடுகிறது. வரி செலுத்தியது போக, முழுவதும் வெள்ளையாகத்தான் வேண்டும் என்பது அவர் போடும் முதல் நிபந்தனை.

தயாரிக்க முன் வந்த பிவிபி சினிமாஸ் ஏற்கெனவே சில சிக்கல்களில் இருப்பதால், வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.

நல்ல தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா.

No comments:

Post a Comment