Thursday, 2 October 2014

வருகிற 10 தேதி தனித்துவமாக களமிறங்கும் யாவும் வசப்படும்

ஈழத்து கலைஞன் புதியவன் ராசைய்யா இயக்கத்தில் முழுக்க முழுக்க லண்டனின் தயாராகி இருக்கும் திரைப்படம் யாவும் வசப்படும். இப்படம் திரில்லர் கலந்த உத்வேகமான திரைக்கதையில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தை பற்றிய தகவலும், ரசிகர்களிடையே படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இப்படத்தை வருகிற 10ம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளது படக்குழு. இதற்கு முன்பு இயக்குனர் புதியவன் வன்னியிலிருந்து “மண்” என்ற திரைப்படத்தை எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment