Sunday, 28 September 2014

தமிழ் நாட்டில் எனக்கு இவர் மட்டும் தான் நண்பர்! எமி ஜாக்ஸன் ஓபன் டாக்

கோலிவுட்டில் மதராசபட்டிணம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவரிடம் உங்களுக்கு தமிழ் நாட்டில் யார் நெருங்கிய நண்பர்கள் என்று கேட்டதற்கு ‘எனக்கு தமிழ் நாட்டில் நண்பர்கள் இல்லை. இங்கு நடிக்க மட்டுமே வருவதால் நடித்து முடித்த உடன் லண்டன் சென்று விடுகிறேன்.

அங்குதான் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கு ஆர்யா மட்டும் தான் நண்பர். மதராசபட்டினம் படத்தில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதுபற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment