Sunday, 28 September 2014

ரஜினியின் பெயரை கெடுத்த படத்தை அவரே பார்க்கிறாரா?

ரஜினியை பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை. அந்த அளவிற்கு கடல் கடந்தும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். ஆனால் சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த படத்தின் ட்ரைலர் ஒன்று ரஜினியின் மனதை மிகவும் சங்கடப்படுத்தியுள்ளது.

படத்தில் அவரது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று கூறி ரஜினியே வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தை ரஜினிக்கு போட்டுகாட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து மெயின் கோன் ரஜினிகாந்த் படத்தை ரஜினியும் அவரது மகள் சவுந்தர்யாவும் இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மினி தியேட்டரில் பார்க்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை படத்தின் இயக்குனர் பைசல் சைஃப் செய்துள்ளார்.

No comments:

Post a Comment