Tuesday, 2 September 2014

அரசியல் பற்றி தெரியணும்னா என்கிட்ட கேளுங்க – கமல்

தமிழ் சினிமாவின் முதல் பேசும்படம் காளிதாஸ். இந்த பெயருடன் காளிதாஸ் என்ற ஒரு நடிகர் அறிமுகமாக இருக்கிறார்.

அவர் தான் பிரபல நடிகர் ஜெயராமின் மகன். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பெயர் ஒரு பக்க கதை.

காளிதாஸை பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்த வந்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

அப்போது கமல்ஹாசன் பேசுகையில், காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர்.

இவரின் சினிமா பயணம் வெற்றிகரமாக அமைய இனிமேல் இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.

சினிமாவில் நடிப்பதை மட்டும் கற்றுக் கொள்ளாமல், சினிமாத் துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ புரிந்தாவது கொள்ளுங்கள்.

லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்சன் நபர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதாவது புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரீஸ், பாலிட்டிக்ஸ் அப்படினா என்னிடம் வந்து கேளுங்கள்.

அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும் என்று கூறினார்.

No comments:

Post a Comment