Monday, 29 September 2014

தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கிவிட்டதா ஐ?

இந்த தீபாவளியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கத்தி, ஐ என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரவிருக்கிறது.

ஆனால் ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் வாரத்தில் நடக்கும் எனவும், இதில் ஜாக்கிஜான் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஹிந்தியில் இசை தட்டை வெளியிட ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் வருகிறார் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால் படம் தீபாவளியிலிருந்து ஒரு வாரம் தள்ளி போகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், தயாரிப்பாளர் தரப்பில் "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும்.

பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்"என்று அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment