Friday, 19 September 2014

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சி

மனைவியின் பிறந்தநாள் அன்று. கணவன் குடித்து விட்டு வருகிறான் வீட்டிற்கு வந்தவன்
தன்னிலை அறியாமல் பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைக்கிறான்.

நடுவீட்டில் வாந்தியும் எடுக்கிறான். மனைவிக்கு கோவம் பொறுக்கவில்லை.

மறுநாள் காலை கணவன் எழுந்தபோது மனைவி வீட்டில் இல்லை, ஒரு துண்டு காகிதம் தலையணை பக்கத்தில் இருந்தது.

அதில் மனைவி எழுதி இருந்தால்...

ஏங்க உங்களுக்கு பிடிச்ச டிப்பன் செஞ்சி வச்சி இருக்கேன்.. மறக்காமே
சாப்டுங்க.. நா கொஞ்சம் அவசரமா வெளிய போகணும்.. நேத்து உடைஞ்ச பொருள்
எல்லாம் வாங்கணும்... சீக்கிரமா வந்துடுவேன்... லவ் யூ "

இதை
படித்த கணவனுக்கு அதிர்ச்சி. கோபாமாக சண்டை போடுவாள் என்று எதிர் பார்த்த
மனைவி இவ்வளவு அன்பாக கடிதம் எழுதி வைத்து இருக்கிறாளே...

மகனை அழைத்து கேட்டான் நேத்து என்ன நடந்தது என்று...

மகன் : "அம்மா உன்ன பெட்ல படுக்கவச்சி.. உன் பேன்ட் பெல்ட் கலட்டுனாங்க...

அப்போ நீ... ஏய் கையை எடு எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிடுச்சி போதைலயே சொன்ன பா...

உண்மையான அன்பு புனிதமானது♥♥♥

No comments:

Post a Comment