Monday, 29 September 2014

தமிழ் ஈழ மக்களின் உணர்வு வெளிபடுத்தும் புலிபார்வை தீபாவளிக்கு வருகிறது

ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவரது கைவண்ணத்தில் மறைந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் வரலாற்று சுவடுடை மையபடுத்தி புலிபார்வை படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பாடல்கள் எழுதி இசையமைக்கவும் செய்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் தமிழ் மக்களின் உணர்வை வெளிபடுத்தும் என்ற நம்பிக்கையில் பலத்த போட்டிக்கு இடையே தீபாவளி அன்று படத்தை வெளியிட வேந்தர் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment