Sunday, 21 September 2014

ரஜினிக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லை?

யாமிருக்க பயமே படத்தை யாரும் அத்தைனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். படம் ஏ,பி,சி என அனைத்து செண்டர்களிலும் பட்டையை கிளப்பியது.

இப்படத்தில் ஃப்ரைட் ரைஸ் திருடனாக நடித்தவர் தான் நளினிகாந்த். இவர் ரஜினி சினிமாவில் அறிமுகமான காலத்தில், இவரும் அறிமுகமானவர். நீண்ட நாட்கள் இடைவேளைக்கு பிறகு அவர் தன் மனதில் உள்ள பாரங்களை எல்லாம் இறக்கி வைத்துள்ளார்.

இதில் ’ரஜினியோட வளர்ச்சியைப் பார்த்து எனக்கு நானே இந்தப் பேர் வெச்சுக்கலை என்பதுதான் நிஜம். அது ரஜினிக்கும் தெரியும். அவருக்கு கொடுப்பினை அப்படி இருந்தது. எனக்குக் கொடுப்பினை இப்படி. கடவுள் எனக்கு விதிச்சது இவ்ளோதான் என்பதை நான் பெருந்தன்மையா ஏத்துக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment