Thursday, 25 September 2014

'ஐ' படத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உங்களுக்காக..!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் 'ஐ' படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங் முடிந்ததை ஒட்டி, சென்னையில் ஷங்கர் உள்ளிட்ட 'ஐ' படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யூடியூப்பில் வெளியான 'ஐ' படத்தின் டீஸரை இதுவரைக்கும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர். ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களின் டீஸர் - டிரெய்லரைக் கூட இவ்வளவு பேர் பார்த்ததில்லை. அதனால், 'ஐ' படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஷங்கர் 'ஐ' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். படம் தீபாவளிக்கு வரும் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

No comments:

Post a Comment