Tuesday, 16 September 2014

ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு போன விக்ரம்!

தமிழ் சினிமா உலக அளவிற்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ஐ படத்தின் டீசரே ஒரு உதாரணம். அந்த அளவிற்கு ஷங்கரின் மேக்கிங்கும், விக்ரமின் உழைப்பும் டீசர் பார்க்கும் போதே தெரிகிறது.

நேற்று நடந்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எல்லோரும் வந்து விட்டார்கள். விக்ரம் மட்டும் எங்கே என்று அனைவரும் தேடி வந்த நிலையில், திடீரென்று கொடுர மிருகம் போல் வேடமணிந்து வந்தார்.

இதை கண்ட பலரும் ஆச்சரியத்தில் திகைத்து போய் பார்த்தனர். மேலும் ஐ டீசரை பார்த்த பலரும் ஏதோ வேறு உலகத்திற்கு சென்றது போல் உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment