Thursday, 25 September 2014

யார் கையில் எத்தனை படங்கள்?

நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, த்ரிஷா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, தமன்னா , காஜல் அகர்வால்,லட்சுமி மேனன், ஶ்ரீதிவ்யா ஆகியோர்  தமிழ் சினிமாவின் முன்னணி  ஹீரோயின்களாக இருக்கிறார்கள்.

இந்தஹிட் ஹீரோயின்கள் நடிக்கும் படங்களின் லிஸ்ட்:

நயன்தாரா, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம் ரவியுடன் ’தனி ஒருவன்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தா வசம் ‘கத்தி’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ என இரண்டு தமிழ்ப் படங்கள் உள்ளன.  அடுத்து, 'பெங்களூர் டேஸ்'படத்தின் தமிழ் ரீமேக்கில் சமந்தா நடிக்க உள்ளார்.

ஸ்ருதிஹாசன் ‘பூஜை’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார்.இந்தியில் செம பிஸியாகி விட்ட ஸ்ருதி ஹாசன் அடுத்து விஷால் - சுசீந்திரன் கூட்டணியில் இவர் நடிக்கலாம் என்ற பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

‘மீகாமன்’, ‘வாலு’, ‘ரோமியோ ஜுலியட்’ ஆகிய படங்களில் நடிக்கும் ஹன்சிகா அடுத்து ’ஆம்பள’, ’இதயம் முரளி’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

அனுஷ்கா ‘லிங்கா’ படத்திலும், 'அஜித் 55' , 'மகாபலி' , 'ருத்ரம்மா தேவி' ஆகிய படங்களில் நடிக்கிறார்.

த்ரிஷா வசம் ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, சுராஜ் இயக்கத்தில் 'ஜெயம்' ரவியுடன் நடிக்கும் பெயரிடப்படாத படம், அஜித்துடன் ‘தல 55’ ஆகிய படங்கள் உள்ளன.

லட்சுமி மேனன் கௌதம் கார்த்தியுடன் ‘ சிப்பாய்’, மற்றும் கார்த்தியுடன் ‘கொம்பன்’ படங்களில் நடித்து வருகிறார்.

ஶ்ரீதிவ்யா அதர்வாவுடன் 'ஈட்டி', விக்ரம் பிரபுவுடன் 'வெள்ளைக்கார துரை', ஜி.வி.பிரகாஷூடன் 'பென்சில்', சிவகார்த்திகேயனுடன் 'காக்கிசட்டை', விதார்த்துடன் 'காட்டுமல்லி', அகிலுடன் 'நகர்ப்புறம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருவது ஶ்ரீதிவ்யாதான்.

தமன்னா எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இருவருக்கும் எந்தப் படமும் தமிழில்  இல்லை.

No comments:

Post a Comment