Tuesday, 30 September 2014

ஐ படத்தை கண்டு நடுங்கும் மலையாள சினிமா!

இந்த வருட தீபாவளிக்கு அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஐ படம் ரிலிஸாக இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் மலையாளத்தில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் அங்கு ஐ படத்திற்கு செம்ம டிமாண்ட். இப்படத்திற்காக பல மலையாள படங்கள் பின் வாங்கவுள்ளது.

அதிலும் மம்மூட்டி நடித்த வர்ஷம் என்ற படமே தள்ளி போவதாக கூறப்படுகிறது. மம்மூட்டி மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment