Monday, 22 September 2014

குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!

பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக்  கடித்தமைக்காக  தாயொருவர் அவரது  குழந்தையை  90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை, அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குழந்தைக்கு 100 தையல்கள் வரை போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்திலேயே அதிக தடவை குத்தப்பட்டுள்ளன.
மேலும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment