Sunday, 7 September 2014

பிரபல நடிகையின் ஒரு முத்தத்திற்கு ரூ 49 லட்சம்!

லண்டனை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் மாடல் எலிசபெத் ஹர்லே. எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஓட்டலில் நடந்தது.

பிரம்மாண்டமாக அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் ‘தன்னை யார் வேண்டுமானாலும் முத்தமிடலாம், அதற்கான ஏலத்தை நானே விடுகிறேன்’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் எலிசபெத்.

கனடாவில் வங்கியை நடத்திவரும் பிரபல கோடீஸ்வரரான இந்திய வம்சாவளி ஸ்டான் பாரதியின் மகனான 27 வயதாகும் ஜூலியன் பாரதி ரூ.49 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

பின் அந்த இடத்திலேயே முத்தத்தை தந்து பணத்தையும் செட்டில் செய்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment