Tuesday, 16 September 2014

என்னோட 2 நாள் வருமானம் தான் கத்தி படம்; சுபாஷ்கரன் அதிரடி.!

கத்தி படத்தின் பல எதிர்ப்புகளை தாண்டி தற்போது படம் ஒரு நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. இதனை பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்க இன்று சென்னை தாஜ் கிளப்பில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள் லைகா குழுமத்தினர். இந்த சந்திப்பு ஆரம்பித்ததும் லைகா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு வீடியோ 45 நிமிடத்திற்கு ஓடியது. அந்த வீடியோவில் லைகாவிற்கும் ராஜபக்‌ஷேவுக்கும் இருக்கும் சம்பந்தங்கள் குறித்த சந்தேகத்திற்கும் விடையளித்திருந்தனர்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் சுபாஷகரன் அல்லிராஜா. பத்திரிக்கையாளர் கேள்வி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களை பார்த்து அல்லிராஜா ஒரு கேள்வியை கேட்டார் அதாவது “ராஜபக்‌ஷே யாரு அவர் ஏன் தமிழ் சினிமாவுல வந்து படம் எடுக்கணும், அப்படி அவர் படம் எடுக்கணும்னு நினைத்திருந்தா அவர் இந்திக்கு தான் போயிருப்பார் எதற்கு தமிழுக்கு வரப்போகிறார், அப்படி அவரோட பணம் வச்சுத்தான் நான் படம் எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, என்னுடைய இரண்டு நாள் வருமானம் தான் கத்தி திரைப்படத்தின் பட்ஜெட், அப்படி இருக்கையில் கத்தி படத்தில் ராஜபக்‌ஷேவிற்கு என்ன வேலையிருக்கப் போகிறது என்று கேள்வி கேட்டார்”… இதற்கு மேலும் பல அமைப்புகள் கொடியை தூக்கிக் கொண்டு வந்தால் அவங்கள என்ன சொல்றது…

No comments:

Post a Comment