Monday, 4 August 2014

மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜீத், விஜய், கார்த்தி..!


தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் கடைசியாக தயாரித்த படம் ஜிகர்தண்டா. இப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் 1980களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் போன்ற மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

அதிலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இப்பவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

இப்போது இந்த ரீமேக் படத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி பெரிதாக எழும்பியுள்ளது.

அஜீத் ஏற்கெனவே ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்திருக்கிறார். கார்த்தி எப்போதும் தன் படங்களுக்கு ரஜினி நடித்த படங்களின் பெயரையே வைத்து வருகிறார்.

மேலும் விஜய் சிறுவயதில் இருந்தே ரஜினி ரசிகன் என்று நமக்கு தெரியும். இவர்களில் யார் நடிப்பார்கள் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment