Wednesday, 6 August 2014

ரஜினிக்காக உருவாகிறது மிகப்பெரிய சிலை!!!


ரஜினி இதையெல்லாம் விரும்பமாட்டாரே.. யார் இப்படி சிலை வைக்கும் அளவுக்கு இறங்கியுள்ளார்கள் என ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்யும்.. ஆனால் விஷயம் இருக்கிறது. ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடத்த இருக்கிறார்கள்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் இங்குதான் படமாக்கப்பட இருக்கிறது. இந்த காட்சியில் மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றும் இடம்பெறுவதால் அதை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தமுறை மைசூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியபோது ரசிகர்கள் கூட்டம் கூடியதால் சற்று இடைஞ்சல் ஏற்பட்டது.

இந்தமுறை அதை தவிர்ப்பதற்காகத்தான் ஷிமோகாவிற்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பை மாற்றியிருக்கிறார்கள். ஆகஸ்ட்-18ல் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment