Saturday, 26 July 2014

விக்ரமின் அடுத்த படம்! அதிர்ச்சியில் சிம்பு!


தமிழ் திரையுலகின் அடுத்த கமல் என்றால் கண்டிப்பாக விக்ரம் தான். படத்திற்கு படம் தன் உடல், மொழி என மாற்றி நடிப்பார், விரைவில் வெளிவரயிருக்கும் ஐ படத்தில் கூட மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்த பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.

ஆனால் கௌதம் தற்போது அஜித் படத்தை இயக்கி வருகிறார், இதை முடித்தவுடன் மீதியிருக்கும் சிம்பு பட வேலைகளை ஆரம்பிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், இந்த முடிவு சிம்புவிற்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.

No comments:

Post a Comment