Thursday, 23 October 2014

வரலாறு காணாத வசூல் சாதனையில் கத்தி

வேதனைகளை வென்று சாதனை படைத்து வருகிறது இளைய தளபதியின் கத்தி. இப்படம் வெளியாக விடாமல் பல பேர் சதி திட்டம் போட்டு தடுத்து வந்தனர்.

கடைசியில் சமரச பேச்சில் ஈடுபட்டு நேற்று உலகம் முழுவதும் கத்தி திரைப்படம் வெளியாகின. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது கத்தி.

இதனால் சென்னை உள்ள சிறு சிறு திரை அரங்குகளில் கூட முதல் நான்கு நாட்கள் டிக்கெட் இல்லை, தற்போது திரை அரங்கு வட்டாரத்தில் விசாரித்து போது கத்தி படம் வரலாறு காணாத வசூல் சாதனை படைக்கும் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு இந்த தீபாவளி டபுள் டமாக்கா - ருசிகர செய்தி

நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் தீபாவளியை குடும்பத்தாருடன் டபுள் டமாக்காவாக கொண்டாடினார்.

அது என்ன டபுள் டமாக்கா என்று விசாரித்த போது தான் கிடைத்து நேற்று அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு தீபாவளி அன்றுதான் முதல் பிறந்தநாள்.

இதனால் டபுள் டமாக்காவாக தீபாவளியை படு விமர்சையாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார் சிவகார்த்திகேயன்.

முட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்!

 

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

 கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..!

புத்தகம் வாசிப்பது பற்றி புகழ் பெற்ற மேதைகள் சொன்ன சில சுவாரசியமான தகவல்கள் !!!


► ''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.


► மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


► 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.


► பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.


► ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.


► 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பேஸ்புக் & தமிழன்? ஒப்பீடு!

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
 செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
 முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
 முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
 வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

 6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

 7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

 8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
 "Block this person"

 9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

 10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
 வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
 பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
 என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
 என்று சொல்லலாம் என்றாலும்,
 "தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
 நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
 மகன் + மகள்
 பெயரன் + பெயர்த்தி
 கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
 எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

 நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை

 தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

 ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

 சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

 பரன் + பரை - ஏழாம் தலைமுறை

 ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
 என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
 (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
 பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
 என்று பொருள் வரும்.
எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
 இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

உங்கள் நண்பர்களுக்கு தெரிய பகிரவும் !!

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு!

 

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.. ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.

அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.

இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).

கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.

இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..

கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.

உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்

 ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது. 

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!


உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும், வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக்கொள்கிறது. “corpus callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்கு தொடர்பே இருக்காது.

அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது.

இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)

இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.

இனி பரிட்சைக்கு க்ளிக் :::http://en.sommer-sommer.com/braintest/

மெலிந்த உடல் குண்டாக... குண்டான உடம்பு மெலிய...

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும்.

மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.

 உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மன தும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப் பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக் கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடை க்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கிய மும் ஏற்படும்.

 அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத்தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்க லாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங் களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.

 இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோ ப்பு இல்லை என்றாலும் அந் த தன்மை உடைய ஷாம்பு வோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்ற னர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச் சாறு கல ந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

 இது அழகு தருவதோடு… உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கல வையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளி த்தால் சருமம் மெருகே றும். அழ கு என்றால் அதில் தலைமுடி தான் மிக முக்கிய மாக கருதப்படு கிறது. அதற்காக இப்போதெல்லா ம் டை அடிக்கின்றனர் பலர்.

 டை அடிப்பதற்கு பதிலாக 100 கி ராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற் றுடன் சிறிதளவு தண்­ணீர் சேர் த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல் லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.

 கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகு க்கு காரணம். சீப்பு, டவல் ஆகிய வற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண் ணை தேய்த்து தலை முடியை அலசவும். ஆரோக்கிய  மான உணவுகளை சாப் பிடவும்.

 இன்றைக்கு நடுத்தர வயதுள்ள வர்களில் பெரும்பாலும் டை அடி க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடி கள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண்மை யை பயன்படுத்தி முடியை கறுப் பாக்கலாம்.

 நிறைய காய்கறிகள் சாப்பிடுவோ ருக்கு சருமம் பளபளப்பாக இருக் கும். இதனால் அவர்கள் எப்போ தும் அழகாக இருப்பார்கள். கேரட், கரு ணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.

 உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளி தாக குண்டா கலாம்.

 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மே சைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொட ர் ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகி விடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்த யத்துக்கு உண்டு.

 குண்டான உடம்புடன் கஷ்டப் படுபவர்கள், உடல் மெலிய… 50 கிராம் கொள்ளை வறு த்து… பொடியாக்கி தினமும் சாப் பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடை யை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலை க்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உட லுக்கு நல்லதே.

ஆண்கள் ஏன் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்று தெரியுமா...?

ஒரு குடும்பம் என்று வந்துவிட்டாலே அதில் பொறுப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை வழிநடத்துவது யார்? குடும்பத்தலைவரா அல்லது குடும்பத்தலைவியா? பெரும்பாலான இல்லங்களில் குடும்பத்தலைவனான ஆண் வேலைக்குச் சென்று பணத்தை ஈட்டுவது மட்டுமே செய்து வருகின்றான். குடும்பத்தலைவி தான் வீட்டின் மற்ற பொறுப்புகளை ஏற்று குடும்பத்தை வழிநடத்தி செல்லுகின்றாள்.

முதலாவதாக, எல்லா ஆண்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லுவது கிடையாது. ஒரு சிலர் தங்களது மனைவியைவிட சிறப்பாக செயல்படுவார்கள். எனினும், பெரும்பாலான ஆண்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகிச்செல்லுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் தங்களது பெற்றோரை வழுவி வந்தவர்களாகவும் அல்லது வளர்ந்து வந்த சூழ்நிலையை பொருத்தும் இவ்வாறு இருக்கின்றனர். பல நேரங்களில் கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனம் போன்றவைகள் காரணமாக இருக்கின்றன.


ஒரு சிலர் அவர்களது வாழ்வில் சில சமயத்தில் இந்த பொறுப்புகளால் ஏற்பட்ட மனநிலை பாதிப்பின் காரணமாக அதனை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். இந்த பொறுப்புக்களை அவர்களது வாழ்வில் ஏற்கனவே ஏற்று வந்ததால் அதனை மீண்டும் ஏற்க மறுப்பார்கள். வலுவான இதயம் உள்ள ஆண்களே பொறுப்பேற்க தகுதி பெற்றவர்கள். எல்லா ஆண்களும் இவ்வாறு அல்ல, ஒரு சிலர் முழுதாக பொறுப்பேற்காமல் சாதுரியமாக சில பொறுப்புகளை மட்டுமே கையாளுவார்கள்.

சிலர் பொறுப்புகளில் ஏற்படும் இழப்புகளுக்கு பயப்படுவார்கள். இதனால் பொறுப்பேற்று அதனை முடிப்பதற்கு பயந்து அதனை விட்டு விலகுவார்கள். தங்களது தலைமையில் பொறுப்பேற்க மறுப்பார்கள். ஒரு ஆண் தன்னை வலிமைஉடையவனாக இவ்வுலகிற்கு காட்டிவந்தாலும் ஒரு சில வேளைகளில் பொறுப்புகளை ஏற்க பயப்படுகின்றார்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பொறுப்பேற்பது ஆகும். இந்த பொறுப்பேற்றல் பயத்தை போக்குவதற்கு ஆதரவும் கடின உழைப்பும் அதிகம் தேவைப்படும். எனினும், எல்லா ஆண்களும் இந்த பொறுப்பேற்பதில் இருந்து விலகுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
1. சோம்பேறித்தனம்


சோம்பேறித்தனத்தினால் தான் பெரும்பாலான ஆண்கள் பொறுப்பேற்க மறுக்கின்றனர். வலிமையையும் உறுதியும் ஆண்களிடம் இருந்தாலும் அவர்களிடம் சோம்பேறித்தனமும் மிகையாக இருக்கின்றது. பொறுப்பேற்றல் என்பது கடினமான காரியம். அதனை கையாள மிகுந்த உறுதியும் முயற்சியும் அதிகமாக தேவைப்படும். இது எல்லா ஆண்களாலும் முடியாது.

2. பிறப்பு வழிப் பண்பு

நாம் அனைவரும் ஒரு சில விசியத்தில் நம்முடைய பெற்றோரை வழுவியே வந்துள்ளோம். ஒரு சிலர் துரதிஷ்டவசமாக பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்ததால், அவர்களின் பொறுப்பேற்றல் குறித்த பயம் இவர்களிடையேயும் இருக்கக் கூடும். சில சமயங்களில் அவர்கள் வளர்ந்து வந்த சூழல் அவர்களை பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்ல வைக்கும்.

3. பயம்


உறுதியளிப்பின் பயமே ஆண்களை பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கின்றது. கடந்தகாலத்தில் அவர்கள் ஏற்ற பொறுப்பில் வெற்றி கிடைக்காதால் அவர்கள் மீண்டும் அப்பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். நாம் எல்லாரிடமும் ஒருவித பயம் இருக்கும். எனினும் சிலர் வலிமைமிக்க ஆண்களாக இருந்தாலும் பொறுப்பேற்பதில் பயம் கொள்ளுவார்கள்.

4. கடந்த காலம்

ஒருசில ஆண்கள் பொறுப்புகளை வேண்டுமென்றே மறுப்பதற்கு அவர்களின் கடந்த கால நிகழ்வுகள் எதாவது இருக்கும். கடந்தகாலத்தில் பொறுப்புகளை ஏற்று அதனால் பெரும் தொல்லையோ அல்லது மன உளைச்சலோ ஏற்பட்டிருக்க கூடும். இவ்விதமான நிகழ்வுகள் நாம் நன்மைகென்றே நினைத்தாலும், ஒரு மெல்லிய தற்காப்பு திரையை நம் மனதில் உருவாக்கிவிடும். இதனால் மீண்டும் அந்த பாதையை கடக்க மறுப்பார்கள்.

5. மனப்பான்மை

பொறுப்புகளை ஏற்பதற்கு உறுதியான மனப்பான்மை அவசியமானதாகும். எதிர்மறையான முடிவை எண்ணும் ஆண்களால் இதனை ஏற்க முடியாது. இத்தகைய எதிர்மறையான எண்ணம் உள்ளவர்கள் தங்களது பொறுப்பில் முதல் அடியை கூட எடுக்க பயப்படுவார்கள்.

6. அனுபவம்


பொறுப்புகளை வெற்றிப்பாதையில் செலுத்த ஒருவர்க்கு கண்டிப்பாக சிறிது அனுபவம் தேவை. அனுபவம் இல்லாத ஆண்கள் இந்த பொறுப்புகளை மறுப்பதோடு மட்டுமல்லாது அதில் வெற்றிபெற தேவைப்படும் அறிவு மற்றும் சிந்தனை இல்லாததால், இதனை ஏற்பதற்கு முற்றிலுமாக மறுக்கின்றனர்.