Wednesday, 17 September 2014

ஆடி மாதம் எதற்கு ஜோடிகள் ஒன்றுசேரக்கூடாது ?

தமிழ் - "ஆடி" வந்தால் புது ஜோடிகளை பிரிப்பதேன்? ஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்.வீட்டில் உள்ள பெரியவர்கள் புதுமண ஜோடிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அணுப்பி வைத்துவிடுவார்கள்.இந்த பழக்கம் கால...ம் காலமாக நம் தமிழகத்தில் நடந்து வருகிறது.என்னை பொறுத்த வரையில் இப்பொழுது அது ஒரு சம்ப்ரதாயமே ...ஆனால் அது கடை பிடிக்க பட்டதுக்கான உண்மையான காரணம்/ விளக்கம் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும் ..

தெரியாதவர்களுக்கு :-

ஆடி மாதம் கூடினால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.சித்திரை மாதம் அதிகம் வெப்பம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் கர்பிணிகளும் பிறக்கும் குழந்தையும் மிகவும் சிரமத்துக்குள்ளாகும்.அந்த நாட்களில் நம் முன்னோர் வாழ்ந்தது பெரும்பாலும் மாட மாளிகைகள் அல்ல ... கூரை வீடுகள் தான் ..அதனால் கோடை வெப்பம் கர்பினிக்கு பிரசவ நேரத்தில் கடும் இன்னலாக அமையும்.

குழந்தைக்கு சின்னம்மை (Small Pox) போன்ற வெப்ப நோய் எளிதில் தாக்கும்... கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை சின்னம்மை நம் பிரதேசத்தில் ஒரு மிக பெரிய உயிர் கொல்லி என்பது குறிப்பிட தக்கது
ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்கும்,தண்ணீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நோய்கள் எளிதில் பரவும்.இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு நோய் எளிதில் தாக்கும்.
ஆடி காற்று பலமாக வீசும் ...அதனால் கூரை மாத்தும் , மற்றும் வீட்டின் மராமத்து வேலை செய்யும் மாதமாகவும் இருந்தது.

இதுவே காரணம் !

அது ஏன் புதுமண தம்பதிகள் மட்டும் ? எல்லா தம்பதிகளையும் பிரிக்கலாமே ? என்கிற கேள்வி எழுவது நியாயம் தான் --
மற்ற தம்பதியர் ஏற்கனவே குழந்தை பேரு பெற்றிருப்பார்கள் என்கிற காரணமாக இருக்கலாம்

அமிதாப் பச்சன் – ஜாக்கி சான் இணையும் படம்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கிசான் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘கோல்டு ஸ்ட்ரக்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்திய – சீனா கூட்டுத் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ‘டிரங்கன் மாஸ்டர்’ படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற டோனி சியுங் – கோரி யேன் இணைந்து இதனை இயக்குகிறார்கள்.

மேலும் படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து அபய் தியோல், ஜாகுலின் ஃபெர்னான்டஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளன. இந்தியா, சீன, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் படபிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் செலவில் படம் தயாராகவுள்ளதாம். படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அன்ரோயிட் போனிலுள்ள நமக்குத் தெரியாத சில வசதிகள்…

             இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் அன்ரோயிட் இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, அன்ரோயிட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.

போனுடன் வந்த மென்பொருள்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.

குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.

ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.

டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.

காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.

தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:

ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.

கீ போர்ட் மேம்படுத்தல்:

பெரும்பாலான அன்ரோயிட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:

அன்ரோயிட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.

அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.

முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:

உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.

திரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.ளுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

முதன்முறையாக பாலா புகைப்படம் எடுக்க விரும்பிய நபர்: ருசிகரத்தகவல்

அர்ஜூன் இயக்கி, நடித்திருக்கும் புதிய படம் ஜெய்ஹிந்த்-2. அர்ஜூன்க்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். படத்தின் மைய கரு இன்றைய கல்விமுறையை மையப்படுத்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்து சொல்லும் வகையில் உருவாகியுள்ளதாம்.

இன்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கானா பாலா, மனோபாலா, மயில்சாமி மற்றும் இயக்குனர் பாலா கலந்து கொண்டாலும் சிறப்பு அம்சமாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி, எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை அழைத்து கவுரவித்தார் அர்ஜூன். முகுந்த்தின் மனைவி இந்து, மகள் ஆர்சியா, முகுந்த் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பாலா பேசும்போது, இந்தப்படத்தின் விழாவுக்கு அர்ஜூன் சார் என்னை அழைத்தபோது, விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தார் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னார்.

இதனையடுத்து நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடன் வர சம்மதம் சொன்னேன். இதுவரை நான் எந்த ஒரு நடிகர், நடிகையருடனோ அல்லது வேறு சினிமாக்காரர்கள் உடனே போட்டோ எடுக்க ஆசைப்பட்டதில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி போட்டோ எடுத்து கொண்டார்.

இதைப்பார்த்த கோடம்பாக்கத்தினர் எந்த ஒரு நடிகர் கூடவும் புகைப்படம் எடுக்காத இந்த மனிதர் இவர்கள் கூட நின்று எடுத்திருப்பது அவரின் தேசபற்றை காட்டுகிறது என்றனர்.

தனுஷை 100 முறை இயக்க விரும்பும் கே.வி. ஆனந்த்

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு தனுஷ் மும்முரமாக நடித்து வரும் திரைப்படம் அனேகன். கே.வி. ஆனந்த்இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இதுபற்றி தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், அனேகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மற்றொரு படத்தில் மீண்டும் கே.வியுடன் இணையும் வரை அவரை மிஸ் பண்ணுவேன்.

கே.வியுடன் இணைந்து வேலை செய்தது என்னால் மறக்க முடியாத அனுபவம் என ட்விட் செய்தார்.

அதேபோல் கே.வி. ஆனந்தும், எனக்கு கதையும், நேரமும் அமைந்தால் ஒரு முறை, இரு முறை அல்ல 100 முறை தனுஷுடன் இணைந்து பணியாற்றுவேன் என ட்விட் செய்துள்ளார்.

புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு....?

 கணவன், மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது நீதிமன்ற வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.

தம்பதியராக இருந்தபோது உயிருக்கு உயிராக இருந்துவிட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்றைக்கு திருமணம் நடைபெறுவது என்பது சிரமமான, செலவு ஏற்படுத்தும் விசயம். ஆனால் ஒரு நொடியில் பிரிந்து விடலாம் என்று இருவரும் முடி வெடுக்கின்றனர். எனவே பிரிவு ஏற்படாமல் தவிர்க்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைவது தாம்பத்ய உறவுதான். பல்வேறு சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கம்தான் சிக்கலுக்கு காரணமாகிறது. தன்னை நேசிக்கும் கணவரையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அடிக்கடி நான் உன்னைக் காதலிக்கின்றேன் சொல்லி மனைவியின் மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.

மன்னிப்பது தெய்வ குணம்

தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

சந்தோசமாக பேசுங்கள்

கணவன் மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.

பொறுப்புணர்வு

குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான். ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது. பணத்தை விட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மை தரக்கூடியது.

நேர்மறை வார்த்தைகள்

தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எதற்குமே இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று கூறுவதனால் உறவு பலப்படுகிறது என்பதை அறிந்து நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.

காது கொடுத்து கேளுங்கள்

மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட இதயப்பூர்வமாக கேளுங்கள். ஏனெனில் அதைத்தான் உங்கள் மனைவி அதிகம் எதிர்பார்க்கிறார்.

வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான முக்கிய காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்கா விட்டாலும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளலாமல் இருக்கின்றனர்.

ஆரோக்கியத்தில் கவனம்

பல ஆண்கள் தங்களின் ஆரோக்கியம் பற்றி கவலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும். அதேபோல் மனைவிக்கும் மாதத்தில் சில நாட்கள் விடுமுறை அளியுங்கள்.

ஏனெனில் ஓய்வற்ற நிலையில்தான் பிரச்சினைகள் எழுகின்றன.அந்த நாளில் உங்கள் மனைவி எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானது. இதுவே பிரச்சினைகளுக்கான முற்றுப் புள்ளியாகும்.

ஐ படத்தின் கடைசி பாடல் படப்பிடிப்பு ஆரம்பம்

 ஷங்கரின் ஐ படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பொதுவாக ஒரு படத்தின் விழா நடக்கிறது என்றால் அப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடித்து விட்டு தான் நடத்துவார்கள்.

ஆனால் ஐ படத்தை பொறுத்த வரை இப்படத்தின் முக்கால்வாசி பகுதி முடிந்தாலும் ஒரு பாடல் எடுக்க வேண்டி இருந்தது, இதை இயக்குனர் ஷங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் இசை வெளியிட்டுக்கு பிறகு நடத்துவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் 3 வில்லன்களில் ஒருவராக நடிக்கும் உபன் பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ படத்தின் பாடல் காட்சி செட்டில் இருக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.

ஆக மொத்தத்தில் மீதி உள்ள பாட்டை இன்றுடன் துவக்கி தீபாவளி அன்று மிக பிரம்மாண்டமாக 3000 திரையரங்குகளில் வெளியிட உள்ளது ஐ படக்குழு.

தொப்பையை குறைக்க அருமையான வழிகள்....!

 உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சிதான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தொப்பையை குறைக்க வழி.

கத்தி பட பாடல்கள் குறித்து சிம்பு சொன்ன அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு நல்ல படங்கள் வந்தாலும் அதை பார்த்துவிட்டு மனதார பாராட்டுபவர் சிம்பு.

நாளை கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்பதால் கத்தி படத்தின் பாடல்களை சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத்.

அப்பாடல்களை கேட்ட சிம்பு, தனது டிவிட்டர் பக்கத்தில், கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் பின்னியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

அதோடு கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் எனவும் ட்வீட் செய்திருக்கிறார்.

அஜீத்துடன் இனி என்னால் நடிக்க முடியாது – அனுஷ்கா

தல 55 படத்தின் படப்பிடிப்பு இப்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்ப குழுவினர் தல 55 படத்தின் டிரைலர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கௌதம் மேனன் பேட்டியளித்துள்ளார். இந்த படத்தில் வரும் அஜீத் கேரக்டரான சத்யதேவ், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுக்கும்.

இந்த கேரக்டரை இப்படத்துடன் முடித்துவிடாமல், படத்தின் தொடர்ச்சியை மிக விரைவில் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

இதை அறிந்த அனுஷ்கா, அஜீத்தின் தொடர்ச்சியாக அடுத்த படம் எடுக்க முடிவு செய்தால் அதில் என்னால் நடிக்க முடியாது என அனுஷ்கா கவுதம் மேனனிடம் கூறிவிட்டாராம்.

ஏனென்றால் இப்போதைக்கு கமிட்டான படங்களை மட்டும் நடித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள போகிறாராம் அனுஷ்கா.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

1. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இது போன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் வராது.
2. இது தவிர உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

3. வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

4. மூட்டு வலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

5. எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.

6. மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரிழிவு, வயிற்றுப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

7. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது

யாருடணும் போட்டோ எடுத்துக்கிற ஆசை இல்ல… ஆனால் இவங்களோட எடுத்துக்கணும்! இயக்குனர் பாலா

அது வழக்கமான சினிமா மேடை அல்ல! ‘அதையும் தாண்டி புனிதமான…’ என்று நெகிழ்வோடு நினைக்க வைத்தார் அர்ஜுன். ஜெய்ஹிந்த் பார்ட் 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குதான் இப்படியொரு முகம் தந்தார் ஆக்ஷன் கிங்.

சமீபத்தில் இந்தியாவுக்காக போரிட்டு உயிர் நீத்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை வரவழைத்திருந்தார் அங்கு. மேஜரின் குழந்தைகள் அர்ஜுனின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நெகிழ்வோடு அமர்ந்திருந்த அவரது குடும்பத்தினரை மேலும் நெகிழ வைத்தது முகுந்த் பற்றிய குறும்படம் ஒன்று. தயாரித்திருந்தவர் அர்ஜுனேதான்.

விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் பாலா இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். எப்பவும் நறுக் சுறுக்கென பேசிவிட்டு அமர்ந்துவிடும் பாலா இன்று நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதுதான் முதல் ஆச்சர்யம். ‘இந்த விழாவுக்கு வரச்சொல்லி நேற்று அர்ஜுன் கூப்பிட்டப்போ நான் வேறு ஏதாவது காரணத்தை சொல்லிட்டு தவிர்த்திடலாம்னுதான் நினைச்சேன். ஆனால் இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பம் கலந்து கொள்வதாக அவர் சொன்னதும் உடனே நான் வர்றதா சொல்லிட்டேன்’.

‘அர்ஜுன் நல்ல மனிதர் என்பதற்கு இந்த மேடைதான் உதாரணம். அவரோட தேசப்பற்றுக்கு உதாரணமா மேஜர் முகுந்த் குடும்பத்தை வரவழைச்சிருக்கார். தன்னை முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் குடும்பத்தாரை வரவழைச்சிருக்கார். அவர் எப்போதும் தன்னோட மூத்த அண்ணனா நினைக்கும் தயாரிப்பாளர் தாணுவை வரவழைச்சிருக்கார். அவர் ராணுவத்தில் சேர முயற்சி செஞ்சதாகவும் அவரது அம்மாவும் அப்பாவும் தடுத்துட்டதாக அர்ஜுன் சொன்னார். அவர் ராணுவத்தில் சேர்ந்திருந்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய அளவுக்கு பெரிய ராணுவ வீரரா இருந்திருப்பார்’.

‘பொதுவா நான் யாரோடும் போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டதேயில்ல. இப்ப நான் ஆசைப்படுறேன். மேஜர் முகுந்த் குடும்பத்துடன் இந்த மேடையில் ஒரு போட்டோ எடுத்துக்கணும்’ என்றார் பாலா.

உடனடியாக அவரது ஆசையும் நிறைவேற்றப்பட்டது.

கமலுக்கு ஒரு புது வாத்தியார்…?

ஆர்யா தம்பி நடித்த முதல் படம் படித்துறை. இந்த படத்தை இயக்கியவர் சுகா. அடிப்படையில் மிக சிறந்த எழுத்தாளர் இவர். அது மட்டுமல்ல, பிரபல கவிஞரும் பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான நெல்லை கண்ணனின் புதல்வர்.

இவர்தான் இப்போது கமலுக்கு டீச்சர்! எதுக்குப்பா எதுக்கு…?

பாபநாசம் படத்தில் நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார் அல்லவா கமல்? அவருக்கு நெல்லை தமிழை சுருதி சுத்தமாக சொல்லிக் கொடுக்கிற விஷயத்தில்தான் இவர் டீச்சர். இந்த படத்தில் நெல்லை பாஷை பேச வேண்டும் என்று முடிவெடுத்தவுடனேயே கமல் செய்த முதல் வேலை, மிக சிறப்பாக நெல்லை தமிழ் பேசும் அறிஞர்களை வரவழைத்து அந்த பக்குவத்தை கற்றுக் கொள்ள முனைந்ததுதான். யார் யாரோ கமலுக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், கமலின் சாய்ஸ் சுகாதான்.

இப்போது பாபநாசத்திலேயே தங்கியிருந்து கமலுக்கு ஒவ்வொரு ஷாட்டுக்கும் உதவி வருகிறார் சுகா. இதற்கிடையில் படத்தில் பங்கு பெற்ற இன்னொருவரை நினைத்து சந்தோஷத்தில் மிதந்தாராம் கமல். அவர்? மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் மகன். இந்த படத்தில் அவரும் ஒரு உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இந்த விஷயம் கமலுக்கே தெரியாதாம். திடீரென ஒரு நாள் இவரை அழைத்து, தம்பி… உன் ஊர் பேரென்ன என்று கமல் விசாரிக்க… அவர் சொன்ன தகவல்தான் அது.

ஒசரத்துல பொறந்தாலும், ஒய்யாரமா அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்ற இருந்த பையன் கமலுக்கு ஆச்சர்யம் தராமல் வேறென்ன கொடுத்திருக்க முடியும்!

அசிடிட்டிக்கு ஏற்ற உணவுகள்

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது.

இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது.

எனவே மன அழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி செய்யலாம். மனதை லேசாக்கும் வகையில் இசையை கேட்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை போக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெய்ன் ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.
முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.
முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதேபோல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம்.

குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச் சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்றவைகளை சேர்த்து கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம். இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

எதை சாப்பிடக்கூடாது?

அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம்.
அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம்.
காபின் நிறைந்த சொக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது குறிப்பாக ஒயின் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

ஐ பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினியை டென்ஷன் ஆக்கிய ஷங்கர்?

ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘ஆர்னால்டு’ வருகிறார் என்றதுமே களை கட்டிவிட்டது. இதற்காக தனி விமானத்தில் சென்னை வந்த ஆர்னால்டை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா. அதற்கப்புறம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்னால்டு. மாலை சுமார் ஆறு மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் விழா துவங்குவதாக திட்டம்.

சென்னை டிராபிக் காரணமா? அல்லது தமிழகத்தில் கால் வைத்ததும், அமெரிக்காவின் பஞ்சுவாலிடி இயல்பாகவே எக்ஸ்பயரி ஆகிவிட்டதா தெரியவில்லை. விழா அரங்கத்திற்கு அவர் வரவே கிட்டதட்ட மணி எட்டாகிவிட்டது. அதுவரைக்கும் மொத்த கூட்டமும் காத்திருக்க, பவுடர் முகத்தோடு யார் வந்தாலும் ஹோய்யோ ஹய்… என்று விசிலடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள். நடுவில் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளே நுழைய, ஏதோ ரஜினியே வந்ததுபோல வந்ததே கூச்சல்! அவரும் அரங்கத்திலிருக்கிற லைட்டுகள் போதாது என்று தன் முன் பற்கள் அத்தனையையும் பிரகாசமாக எரிய விட்டு அமர்ந்தார். லதா ரஜினி தன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா சகிதம் உள்ளே வந்தார். அப்போதும் பேய் கூச்சல்.

சுமார் 7.40 க்கு ரஜினியை அழைத்து வந்து நேரு ஸ்டேடியத்தின் நடு ஹாலில் அமர வைத்துவிட்டார்கள். இத்தனைக்கும் சில நிமடங்களுக்கு முன்பாகவே வந்துவிட்ட அவரை வெடியிட்டிங் ஹாலில் ரெஸ்ட் எடுக்க வைத்திருந்தார்கள். ரஜினியை முன் கூட்டியே வந்து வரவேற்று அமர வைக்க வேண்டிய டைரக்டர் ஷங்கர் அதற்கப்புறம் பத்து நிமிடம் கழித்துதான் உள்ளே வந்தார். அவர் வரும் வரைக்கும் தனியாகவே குறுகுறுவென அமர்ந்திருந்த ரஜினி முகத்தில் லேசான படப்படப்பு. கோபம். நல்லவேளை… அதை வெளிக்காட்டிக் கொள்ள விடவில்லை ரசிகர்களின் உற்சாகம். நாலாபுறத்திலிருந்தும் ‘தலைவா…’ என்று கூக்குரலிட்டார்கள். நல்லவேளையாக ஷங்கர் வேகமாக வந்து ரஜினி பக்கத்தில் அமர்ந்து அவர் காதருகே ஸாரி கேட்டுக் கொண்டார்.

ரஜினியின் கோபமெல்லாம் அதற்கப்புறம் ஷங்கர் காட்டிய திரை மேஜிக்கில் காணாமல் போயிருந்தது. கிட்டதட்ட பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் விக்ரமின் லைவ் பர்மாமென்ஸ் ஒன்று அற்புதம். ஒரு குரங்கு மனிதனாகவே மாறியிருந்தார் அவர். முன் பற்கள், கூறிய கண்கள். நமது முதுகு தண்டையே ஜில்லிட வைத்த அற்புதமான மேக்கப் அது. தன் கட்டை விரல் உயர்த்தி விக்ரமிடம் தன் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டார் ரஜினி. ஷங்கரை முதுகில் தட்டி பாராட்டிக் கொண்டேயிருந்தார்.

இப்படி ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டி மிரள வைத்த விக்ரம், அதே கெட்டப்போடு பேசும்போது அவரை விட்டு கண்கள் அகலவில்லை ஒருவருக்கும்.

ஷங்கரின் மேஜிக்கை வெகுவாகவே ரசித்த ஆர்னால்டு, ‘வாங்க ஹாலிவுட்டுக்கு. உங்களோட சேர்ந்து ஒரு படம் நடிக்க ஆசைப்படுறேன்’ என்று கூற, அரங்கத்தில் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது.

ஷங்கர் என்ற மாபெரும் கலைஞனை நாடே கொண்டாட வேண்டிய பொன்னான தருணம்தான் அது!

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. இதற்கு உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதே ஆகும்.

வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன.

கருப்பு பீன்ஸ்
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும்.
இவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.

இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேரிக்காய்
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.

ஏனெனில் ஆய்வு ஒன்றில் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.
ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதைகள்
கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

வெள்ளை டீ(White Tea)
நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது.

இந்த ஆசிட் உடலில் சென்றால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.
ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.