Friday, 5 September 2014

பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு வேண்டுகோள்

பல்வேறு சளி சார்ந்த சுவாச கோளாறுகள் ஏற்படும் போது, பிள்ளைகளுக்கு நீராவி பிடிப்பதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீராவி பிடிப்பதனால் பிள்ளைகளின் சளி நோயை கட்டுப்படுத்த முடியாது என ருஹூனு பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான பேராசிரியர் சுஜீவ அமரசேன கூறினார்.

இதனால் பிள்ளைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படுவதாகவும், உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

கொழும்பு வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் 16 வயதுக்கு குறைவான அதிக பிள்ளைகள், நீராவி பிடிப்பதனால் ஏற்படும் தீக்காயங்களுக்காகவே அனுமதிக்கப்படுவதாக ருஹூனு பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான பேராசிரியர் சுஜீவ அமரசேன மேலும் கூறினார்.

விஜய் ஆண்டனியின் அடுத்த மூன்று படங்கள்!

'நான்' படம் விஜய் ஆண்டனியை நல்ல ஹீரோவாக அடையாளம் காட்டியது. கடந்த வாரம் ரிலீஸ் ஆன 'சலீம்' படமும் விஜய் ஆண்டனிக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கிறது.

இந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த மூன்று படங்களில் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கிறார். 'இந்தியா- பாகிஸ்தான்' , 'சைத்தான்', 'சலீம் பார்ட்- 2' ஆகிய மூன்று படங்கள் விஜய் ஆண்டனி கைவசம் உள்ளன.

'இந்தியா - பாகிஸ்தான்' படம் பாதி முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு வேலைகளை ம்முடிக்கிவிட்டு, விரைவில் முடிக்க இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையான  டிசம்பர் 25 இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'சைத்தான்', 'சலீம் பார்ட் - 2' ஆகிய இரு படங்களில் நடிக்க இருக்கிறார். 

காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா?

சில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தால் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்கின்றனர் நிபுணர்கள்.

வாத்ஸ்சாயனார் எழுதியுள்ள காமசூத்ரத்தில் 64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும் ரசிக்கவும் மட்டும்தான். இவற்றை பின்பற்றிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.

தாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான நிலைதானே உற்சாகத்தை அதிகரிக்கும். அதை விடுத்து வலி நிறைந்த உறவுகள் செக்ஸ் பற்றிய எண்ணத்தையே மறக்கடிக்கச் செய்துவிடும் காமசூத்ராவில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று. இந்த பொசிஷன்களை படமாக வரைந்திருப்பது பார்த்த உடன் மனதில் கிளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தானே தவிர இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

புதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நுட்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கோவில்களில் சிற்பங்களாகவும், நூல்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றால் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வலியும் வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள். இவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.

அதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.

மயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும்  என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' - பெண்கள் ...

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர் களாகத் தெரிகிறார்கள்.

அழகு குறிப்புகள்: குதிகால் செருப்பு வாங்க போறீங்களா..?

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-


குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:


* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.

* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.

* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

கணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்....?

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?


1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்
   
   
 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
   
   
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.
   
   
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
   

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?



பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
   
   
உங்கள் பங்கு என்ன?



உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.