Tuesday, 19 August 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்க...!


நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய

மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

'சதுரங்க வேட்டை' படத்திற்கு ரஜினி பாராட்டு..!


 இயக்குநர் வினோத் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'சதுரங்க வேட்டை' படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் 'சதுரங்க வேட்டை'. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

'சதுரங்க வேட்டை' படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டியதாக தயாரிப்பாளர் மனோபாலா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் " ரஜினிகாந்த் எனது படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். "நீ அதற்கு தகுதியானவன்" என்று தெரிவித்தார். இந்த மனசு யாருக்கு வரும்..சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்..!!!" என்று தெரிவித்துள்ளார்.

'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் தனது இரண்டாவது படத்தை, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேஸ் சிலிண்டர் எரிபொருளை சேமிக்க 10 வழிகள்!


1. பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் முன் அதனை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து விடவும். ஈரத்தை சூடுபடுத்தி காயச்செய்ய கேஸ் சற்றே அதிகம் செலவழியும். எனவே நன்றாகத் துடைத்து வைப்பதன் மூலம் சிறிதளவு மிச்சம் செய்யலாம்.

2. சமையலைத் துவங்குவதற்கு முன்பு வெட்டப்பட்ட காய்கள், மற்றும் தேவையான பொருட்களை உடனடியாகத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பத்திரத்தை வைத்து விட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவழியும்!

3. பிரிட்ஜில் வைத்த பொருளை கொதிக்க வைக்கும்போது அது சாதாரணமாக உலரவிடவும். இதனால் நேரடியாக பிரிட்ஜில் இருந்து அடுப்பில் வைத்து அது காய்ம் நேரத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

4. சமையல் பாத்திரம் போதுமான அளவுக்கு சூடான பிறகு பர்னரை சிம்மில் வைக்கவும். குறைந்த நெருப்பில் கொதிக்கும் உணவிற்கு ஊட்டச்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

5. சமைக்கும்போது பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் கொதிப்படைவது விரைவில் நிகழும் எரிபொருளை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

6. பிரஷர் குக்கர் மூலம் சமைக்கவும் ஏனெனில் அது அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது.

7. சமயல் பொருளில் அதிக தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும், ஏனெனிலி அது கொதிப்பதற்கு அதிக எரிவாயு தேவைப்படும்.

8. மைக்ரோ வேவ் அடுப்பை பயன்படுத்தலாம். ஆனால் இந்திய சமயலுக்கு அது சரிப்பட்டு வராது என்றால் ஹைபிரிட் மாடலை வாங்கி வைத்துக் கொள்ளவும். மைக்ரோவேவை பயன்படுத்தி அரை வேக்காடு செய்து கொண்ட பிறகு கேஸ் பர்னருக்கு மாற்றினால் பெருமளவு கேஸ் மிச்சம் செய்யலாம்.

9. தண்ணீர் கொதிக்கவைக்கவேண்டுமென்றால் அடிக்கடி கேசை திறக்காமல் தெர்மாஸ் பாட்டிலை பயன்படுத்தவும்.

10. ரெகுலேட்டர், பைப்கள், பர்னர் ஆகியவற்றில் லீக் இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்யவும். மேலும் காரியம் முடிந்தவுடன் ரெகுலேட்டர் ஸுவிட்சை ஆஃப் செய்து விடுவதை கவனமாகச் செய்யவும்.

இவை அனைத்தும் செய்து ஓரளவுக்கு மிச்சம் செய்ய முடிந்தால் நல்லது. இல்லையெனில் பழைய காலம் போல் விறகடுப்பிற்கு மாறவேண்டியதுதான்! விறகு விற்பனை அமோகமான பிறகு அதிலும் அயல்நாட்டு முதலீட்டை வரவேற்று அதன் தலையிலும் நம் அரசு கை வைக்கும். ஆனால் அதற்குள் ஓரளவுக்கு நாம் சுதாரித்துக் கொள்ளலாம்.

மீண்டும் பிரச்சனையில் கத்தி! உருவாகிறது புதிய மாணவர் படை..!


நாட்டில் எவ்ளோ பிரச்சனை இருக்கு, இப்ப வந்து கத்தி, சுத்தின்னு சில நாட்களுக்கு முன் சீமான் பேசினார். சமீபத்தில் நடந்த புலிப்பார்வை இசைவெளியீட்டு விழாவில் சீமான் மற்றும் படக்குழுவை எதிர்த்தும் சில மாணவ அமைப்புகள் கோஷமிட்டனர். பின் அந்த பிரச்சனையை சீமானே பேசி முடித்தார்.

இப்படத்திற்கு சீமான் ஆதரவு தருவது போல் கத்தி படத்திற்கு இவர் ஆதரவு உள்ளது. ஆனால் இப்படம் ராஜபக்சே நண்பர் தான் தயாரிக்கிறார் என்பதாக சில செய்திகள் வெளிவருவதால் எப்படியாவது படம் வருவதை தடுக்க மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.

தற்போது தமிழ் அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ’தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு’ என ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டும் படத்திற்கு சட்டப்பூர்வமாக வழக்கு போடப்போவதாக கூறியுள்ளனர்.

மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!!

பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின்பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாகமாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் சில ஆலோசனைகள்....
:-
புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கின்றனர். சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.
:-
30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும். எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரைநிம்மதியடையவைக்கும்.
:-
அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது.
எனவே இரண்டுகுடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள். மாமியார் – மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது.
:-
மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப் படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.
:-
மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும்.எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.
:-
மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றையமருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம்.

சன்னி லியோனுடன் அந்த காட்சிகளில் நடிக்க தயார்! சச்சின் அதிரடி!


சன்னி லியோன் ஒரு பாட்டிற்கு ஆடினாலே அந்த படம் ஹிட் தான். இந்நிலையில் ஜிஸம்-2, ஜாக்பாட், ராகினி போன்ற படங்களில் இவர் கதாநாயகியாவே நடித்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவினார்.

ஜாக்பாட் படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகர் சச்சின் ஜோஷி. இப்படத்தில் பல காட்சிகளை சென்ஸார் போர்ட் கட் செய்தது. இதற்கு விளக்கம் அளித்த சச்சின் ‘ சினிமாவில் பிகினி காட்சிகளை அனுமதிப்பது போல் இந்த காட்சிகளையும் அனுமதிக்கவேண்டும்.

மேலும் சென்ஸார் அனுமதி தந்தால் சன்னி லியோனுடன் எப்படியும் நடிக்க நான் ரெடி’ எனக் கூறியுள்ளார்.

பெண்ணுக்கு வரன் தேடுறீங்களா? அப்போ இதை படிங்க......!


23 வயதை கடந்து தனது சொந்த காலில் நிற்கும் எந்த ஒரு பெண்ணிற்கும் தனது வாழ்கை குறித்த தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான தகுதியுண்டு. காதலுக்கு அர்த்தம் தெரியாமல் வெறும் நிறத்தை மட்டுமே பார்த்து மனதை பறிகொடுத்து திருமணத்திற்கு பின் கணவனின் சுயரூபம் தெரிந்து கண்ணீர் வடிக்கும் இளம் பெண்களையும் பார்க்க முடிகிறது.
:-
கடைசியில் கோர்ட் படியேறி கணவன் மனைவி உறவு பந்தத்தைஅறுத்துக்கொள்வது அல்லது உயிரை விடும் முடிவை மேற்கொள்ளும் பெண்கள் பலர் இருக்கவே செய்கின்றனர். திருமணத்திற்கு முன் கொஞ்சம் கவனமாக இருந்தால் திருமணம் போல் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையும் இனிக்கும். .
:-
பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்யும் பொழுது அதில் முக்கியமாக பெற வேண்டிய ஒன்று பெண்ணின் முழு சம்மதம். பெண்களுக்குதிருமணம் நிச்சயிக்கும் பொழுது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். பெண்களை காட்டிலும் 3 வயது அதிகமாகஉள்ள ஆண்களை துணையாக தேர்ந்தெடுக்கலாம்.
:-
7 வயது 10 வயது வித்தியாசத்தில் மணமகனை தேர்ந்தெடுத்தால் அதில் பல்வேறு சிக்கல்களை வருங்காலத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஜாதகம் பார்ப்பதற்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவிற்கு மருத்துவ சான்றிதழ்களை இரு தரப்பிலும் வாங்கி பரிசோதித்துக்கொள்வது அவசியம்.
:-
அதே போன்று தனது படிப்பிலும், சம்பளம், வேலை ஆகியவற்றுக்கு சமமான ஆண் மகனைத்தான் தேர்வு செய்யவேண்டும். இதனால், ஏற்படும் மன வருத்தங்கள் பெரிய அளவிலான பிரிவுகளை உண்டாக்கி நிரந்தரமாக உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். திருமணத்தின் போது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னாலும் சூழல்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றிவிடுகிறது.
:-
நிறம், உடல்வாகுக்கு ஏற்றவாறு மணமகனை தேர்வு செய்யவேண்டும். திருமணத்திற்கு முன் தன் அழகை கௌரவமாக மதிக்கும் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு அதை அபாயகரமானதாக பார்க்கின்றனர். இதனால், தான் பெரும்பாலான குடும்பங்களில் சந்தேகம் எழுந்து கொலை என்ற அளவிற்கு போய்விடுகிறது.
:-
நிச்சயதார்த்ததை உறுதி செய்வதற்கு முன்பே அதிக காலம் எடுத்து மாப்பிள்ளை பற்றியும், மாப்பிள்ளை வேலை செய்யும் இடம், அவரின் பழக்கவழக்கம், குடும்ப பின்னணி அனைத்தையும் சரிவர விசாரிப்பது அவசியம். இதில் பல்வேறு விதங்களில் தற்போது மோசடி செய்யப்பட்டு அதனால் ஆலோசனைக்கு வருபவர்கள் அதிகரித்துள்ளனர்.
:-
பெண்கள் கட்டாயம் தங்கள் உடைகளில் கட்டுப்பாடு வைத்துக்கொள்ளவேண்டும். உடலுடன் இணைந்த இறுக்கமான உடைகள். இதுபோன்ற உடைகள் பெண்கள் அவர்களுக்கு அவர்களே தேடிக்கொள்ளும் வினைகள் என்று தான் கூறவேண்டும். நவீன நாகரீக ஆடைகளை அணிவதற்கு யாரும் தடைசொல்வது கிடையாது.
:-
ஆனால், அதில் கட்டுபாடு என்பது அவசியம்.தன் பிள்ளைஎன்று கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து வளர்ப்பதால் திருமணம் முடிந்து செல்லும் இடத்திலும் அதனையே எதிர்பார்க்கின்றனர். பிடிவாத குணத்துடன் வளர்க்கப்படும் பெண்கள் கட்டாயம் திருமண வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
:-
இதுபோன்ற வேறுபாடுகளில் திருமணம் செய்தவர்களில் ஒருவர் , இருவரை தவிர 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பிரிவை சந்திக்கின்றனர். விவகாரத்துக்கு பிறகு ஆண்களால் சமூகத்தை எளிதாக எதிர்கொள்ளமுடியும். ஆனால்பெண்கள் தங்கள் வாழ்கையை இழந்து தவிக்கும் சூழல் உருவாக்கிவிடும். திருமணத்திற்கு முன்பு அதிக கவனத்துடன் தன் துணையை தேர்ந்தெடுக்கவேண்டும்.

மனைவிகளுக்கு சில உபதேசங்கள்.... !


1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.

2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.

3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

4. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.

5. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் போது.

6. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.

7. கணவன் கோபத்திலிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இரவில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கணவன் தான் உங்களுக்கு சொர்க்கமும் நரகமும்.

8. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தெரிவு செய்து வழங்குங்கள்.

9. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள்.

12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.

13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.

14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் வில்லனாகிறார் அர்ஜூன்!


நடிகர் அர்ஜூன் மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

நாயகனாக மட்டுமே நடித்து வந்த அர்ஜூன் கடல் படத்தில் மணிரத்னத்துக்காக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவருடைய நடிப்பு பேசப்பட்டதால் தொடர்ந்து வில்லனாக நடிக்க கேட்டு வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால், இவர் அதற்கு வளைந்து கொடுக்கவில்லை.

மாறாக, ‘ஜெய்ஹிந்த்’ இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கியதோடு அதில் நாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அர்ஜூன் தெலுங்குப் படம் ஒன்றில் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் இயக்குகிறார். அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் வில்லன் நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாம். அதனால அர்ஜூனைப் போலவே மற்றொரு தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவும் வில்லனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

யாரும் தொடாத ஒரு கதைக்களம் அஜித்திற்காக உருவாகிறது..!


கௌதம் மேனன் இயகத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித். தொடர்ந்து கோட், சூட், பைக் சேஸிங், கன் என சுத்திக் கொண்டிருந்த அஜித்தை ‘வீரம்’ படத்தில் வேட்டி, சட்டை, அரிவாள், மாட்டு வண்டி என டோட்டலாக மாற்றிக் காட்டி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார் சிவா.

இதனால் இவரின் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள சிவா, ‘‘அஜித் படத்திற்கான கதையை நான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒன்றை மட்டும் என்னால் இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும்.

இதுவரை தமிழ் சினிமாவிலேயே யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை அஜித்திற்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்!’’ என்று கூறியிருக்கிறார். இதனால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை!


நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடித்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.

அலோ வேரா ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

கற்றாழை
aloe-vera
மஞ்சள்

தேன்

பால்

ரோஸ் வாட்டர்

செய்முறை:


மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயாரித்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயாராகிவிடும். சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி தூய்மையான முகம் துடைக்கும் டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்கலாம்.

சன்லெஸ் நீக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

கற்றாழை

எலுமிச்சை சாறு

செய்முறை:


வெயிலில் அலைந்து விட்டு வீட்டிற்கு வந்தால் முகம் கருப்பாகி விடும். இதை போக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.

கற்றாலை ஜெல், எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.