Thursday, 14 August 2014

தலையணை மந்திரம்!


எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது.

இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன. அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது.

இதனால், தூக்கம் குறைந்து மருந்து, மாத்திரை, போதை என்று பெருகிப்போனது. மனசும், ஆரோக்கியமும் சீராக இருந்தால்
மட்டுமே, படுத்தவுடன் தூக்கம் வரும். தூக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, சுகமான தலையணைகள். இதனால், தற்போது, தலையணைகளுக்கு மவுசு அதிகரித்து, விதவிதமான தலையணைகள் உருவாகி வருகின்றன.

பழங்காலத்தில், துணிகளை சுருட்டி வைத்து, தலையணையை உருவாக்கினர். அப்புறம், பஞ்சினால் தலையணை உருவானது. பின், தேங்காய் நார் மூலம் தயாரித்தனர். இப்போது, பாரம்பரிய பழக்க முறை மாறி, சிந்தெட்டிக் தலையணைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சரியான உயரத்தில், தலையணையை வைக்காவிட்டால், முதுகு வலி, கழுத்து வலி, தூக்கமின்மை ஏற்படும். தலையணை வைக்கும் போது, நம்முடைய கழுத்து, தலை மற்றும் தோள் ஆகிய மூன்று பகுதிகளும் தலையணையில் சமமாக இருக்க வேண்டும். இப்படி வைத்து தூங்கினால் தான், தூக்கம் சீராகும்.

ஓட்டல்களில், சரியான அளவுகளில், தலையணைகள் வைக்கப்படுகின்றன. கழுத்து வலி உள்ளோர்களுக்கு, புதுவிதமான தலையணைகள் உருவாக்கப்படுகின்றன. தலையணை பொருத்தமாக இருந்தால், தூக்கத்திற்கு கவலை இல்லை. அதுமட்டுமின்றி, தலையணை சுத்தமாக, மிதமான நிற தலையணை உறைகளுடன் இருந்தால் பார்க்க, இதமாகவும், தூங்குவதற்கு சுகமாகவும் இருக்கும்!

நிம்மதியாக தூங்க...

* இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள், டீ, காபி குடிக்க வேண்டாம்.

* இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.

* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.

* ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளோர், கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது, இனிமையாக சென்றதற்கு, கடவுளுக்கு நன்றி கூறலாம்.

* படுக்கை அறையில், அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.

* சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை படிக்கலாம்.

* மனசுக்கு இதமான இசையை, கேட்பதும் நல்லது.

அனேகன் சூப்பர் டூப்பர் ஸ்கிரிப்ட் - கசிந்த சுவாரசியம் !


கடந்த இரண்டு வருடங்களாக சரியான வெற்றி கிடைக்காமல் தவித்த தனுஷ்க்கு வேலையில்லா பட்டதாரியின் வெற்றி அவரின் மார்கெட்டை உச்சத்துக்கு ஏற்றியுள்ளது.

அடுத்து அவர் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் அனேகன். தற்போதே இப்படத்தின் சுவாரசியங்கள் கசிய தொடங்கி விட்டன, இந்நிலையில் இப்படத்துக்காக தனுஷ் பல கெட்டப்களில் அசத்தி உள்ளார் என்பது தெரிந்த செய்தி தான் என்றாலும் ஒரு வார இதழ் பேட்டியில் சில தெரியாத செய்தியை இப்படத்தின் இயக்குனர் கே .வி ஆனந்த் பகிர்ந்து உள்ளார்.

அந்த பேட்டியில் "அதாவது இக்கதையை நான் தனுஷிடம் சொல்லி முடித்த பின் அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு "தமிழ்ல இதுதான் எனக்கு பெரிய பட்ஜெட். இப்போ என்னை நம்பி இவ்ளோ பெரிய பட்ஜெட்ல படம் பண்ணலாம்னு வந்தது ஆச்சர்யம்’னு சொன்னார்.

அது மட்டும் இல்லாமல் இக்கதை கேட்டு இது சூப்பர் டூப்பர் ஹிட் ஸ்டோரி என்றார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற அவருக்கு படத்தில் சில சவாலான விஷயங்களை கொடுத்தேன், அவர் செய்த சாகசங்கள் படம் வந்து பிறகு உங்களுக்கு தெரியும் என்றார்.

பிரபல தொலைக்காட்சிக்கு தனது திருமண வீடியோவை விற்ற டிடி..!


பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கடந்த 12 வருட காலமாக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

இவர் சமீபத்தில் தனது நீண்ட கால நண்பர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அல்லவா. இவர்களின் திருமணத்தை எந்தவொரு வீடியோகிராபர்க்கும் அனுமதி கொடுக்காமல் முழுவதுமே அந்த தனியார் தொலைகாட்சி குழு படம் பிடித்தது.

ஏனென்றால் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவந்தவர் நம்ம டிடி, இவர்களின் திருமண வீடியோவை டிடி நல்ல விலைக்கு விற்று விட்டார் என்கிறது தொலைகாட்சி வட்டாரம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களின் திருமண வீடியோ அந்த தனியார் தொலைக்காட்சியின் திருமண சம்பந்தமான நிகழ்ச்சியில் ஒளிபரபரப்பாக உள்ளது.

மீண்டும் திருமணம் செய்துகொள்ள ஆசை - யுவன் அதிரடி!


'அஞ்சான்' மற்றும் 'ராஜா நட்வர்லால்' படங்களோடு சேர்த்து 102 படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன்.

சுஜாயா சந்திரன் என்பவரை மார்ச் 21 ,2005ல் திருமணம் செய்த யுவன், கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து பெற்றார். அதற்குப் பிறகு, ஷில்பா என்பவரை செப்டம்பர் 1, 2011ல் திருமணம் செய்தார்.

அதிலும் விரிசல் ஏற்பட்டுவிட்டதாம். ஷில்பா தன் அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இந்நிலையில் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இஸ்லாமிய மதத்தைத் தழுவிய யுவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சமீபகாலமாக தனிமையை சற்று அதிகமாக உணருவதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் யுவன். யுவனின் இந்த திருமணம் குறித்த பேச்சால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது .

அஜித் கவரக்கூடியவர், விஜய் நகைச்சுவையாளர், சூர்யா கூர்மையானவர் - வித்யுத் ஜம்வால்..!


 அஜித் கவரக்கூடியவர், விஜய் நகைச்சுவையாளர் மற்றும் சூர்யா கூர்மையானவர் என மூவருடனும் நடித்த வித்யுத் ஜம்வால் கூறியுள்ளார்

'துப்பாக்கி', 'பில்லா 2' ஆகிய படங்களில் விஜய், அஜித் நடித்த வித்யுத் ஜம்வால் தற்போது சூர்யாவோடு 'அஞ்சான்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அஜித், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்தவர், இப்படத்தில் சூர்யாவிற்கு நண்பராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரடு நடித்த அனுபவங்கள் குறித்து வித்யுத் ஜம்வால் "அவர்கள் முன்னணி நட்சத்திரங்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் அவர்களிடையே பொதுவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பண்புகள் உள்ளன. அதுதான் அவர்களது தனித்துவம். அதுதான் அவர்களை இவ்வளவு பெரிய நட்சத்திரமாக்கியுள்ளது" என்றார்

மேலும், "அஜித் அவர்கள் உங்களை கவர தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இயல்பிலேயே கவரக்கூடியவர். விஜய் மிகவும் அமைதியானவர் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அவர் ஒருவருடன் நெருக்கமானால், அவரைப் போல நகைச்சுவையாளர் எவரும் இல்லை. தொடர்ந்து ஜோக்குகள் சொல்லி, மகிழ்விப்பார். சூர்யாவின் கண்களில் அவ்வளவு கூர்மை இருக்கும். அதே தீவிரத்துடன் நடிக்கவும் செய்வார் " என்று மூவரைப் பற்றியும் தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

புத்தம் புது காலை பாடல் - ராஜாவின் புதிய கைவண்ணத்தில் வெளிவருகிறது..!


கார்த்திக்-ராதா அறிமுகமான முதல் படம் ''அலைகள் ஓய்வதில்லை''. 1981ல் பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றன. அதில் பஞ்சு அருணாசலம் எழுதிய, 'புத்தம் புது காலை...' -என்று தொடங்கும் எஸ்.ஜானகி பாடிய பாடல் கேசட்டில் மட்டும் இடம்பெற்றிருந்தது. அதை பாரதிராஜா விஷூவல் பண்ணவில்லை. ஆனபோதும் அந்த பாடலும் மெகா ஹிட்டானது.

ஆனால் அந்த பாடலை இப்போது இளையராஜா இசையில் வெளியாகவிருககும் மேகா என்ற படத்தில் இணைத்து விஷூவல் பண்ணியிருக்கிறார்கள். கதைப்படி, ஒரு திருமண விழாவில் சந்தித்துக்கொள்ளும் ஹீரோ-ஹீரோயின் இருவருக்குமிடையே காதல் மலர்வது போன்று உருவாக்கபபட்டுள்ள அந்த காட்சிகளின் பின்னணியில் இந்த புத்தம் புது காலை பாடல்தான் இணைக்கப்பட்டுள்ளது. ஆக, மான்டேஜ் சாங்காக அந்த பாடலை மீண்டும் ஒலிக்க வைத்துள்ளனர்.

இந்த பாடலில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்த அஸ்வின் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி தாங்கே ஆகிய இருவரும் இணைத்து நடித்துள்ளனர்.