Wednesday, 13 August 2014

பொங்கலுங்கு வருகிறார் தல அஜீத்..!


அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விவேக், தேவி அஜீத், பிரம்மானந்தம், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டான் மெக்கதூர் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.

நாளுக்கு நாள் இப்படத்தின் சுவாரஸ்யமான செய்திகள் வந்துக் கொண்டே இருக்கிறது. இச்செய்திகள் தல 55 எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ஏற்கனவே அஜீத் நடிப்பில் பொங்கல் அன்று ரிலீசாகி வெற்றிப் பெற்ற படம் வீரம். அதேபோல் இப்படத்தையும் பொங்கல் அன்று ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளனர்.

தல 55 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஐதராபாத் மற்றும் மலேசியாவில் படமாக்கவுள்ளனர்.

பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று !


ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12
பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று

ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12. ஏன் 12? இதற்கு சித்தர்கள் சித்தர்கள் அளித்த விளக்கம் என்ன?

எப்படி ஒரு செடி நான்கு பருவங்களையும் கண்டபின் பூ பூக்கிறதோ , அது போல் நம் உடலில் உள்ள 12 அவயங்களும் முழு வளர்ச்சி அடைந்து தன்னை தனது அடுத்த பயணத்திற்கு தயார் செய்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 வருடங்கள்.

இந்த 12 வருடங்கள் 12 இராசி/நட்சத்திர மண்டலங்களைக் குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்த பின், பூமி இந்த 12 நட்சத்திர மண்டலங்களையும் 12 முறை கடந்து முடிக்கும் பொது, உடலின் 12 அவயங்களின் அடிப்படை வளர்ச்சியும் முற்று பெரும். இங்கிருந்து தொடங்குவதே இவ்வுடலின் அடுத்த பயணமான தன்னுள் இருந்து மற்றொரு ஜீவனை உருவாக்கும் பணி.

இதன் காரணம் கொண்டே, உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை சித்தர்கள் - " பூப்பெய்துதல்" என்றும் "பருவம் அடைதல்" என்றும் அழைத்தனர். ( தமிழ் அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட )

12 அவயங்கள் என்ன என்ன என்று கேட்போருக்கு- இதயம், மூளை, நுரையீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை, ஐம்புலன்கள்(5).

முதல்மரியாதையை வெறுத்த இளையராஜா! அழுத பாரதிராஜா!


இசைக்கு மறுபெயர் என்று இருந்தால் கண்டிப்பாக அது இளையராஜாவாக தான் இருக்கும். கடந்த 30 வருடங்களாக இசைத்துறையில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் இவர்.

ஆனால் சமீபத்தில் மேகா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர் கூறிய தகவல் ஒன்று அனைவரையும் ஆச்சரியபட வைத்தது. இதில் 'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்க்கும் போது எனக்குப் பிடிக்கவில்லை. அதை பாரதிராஜாவிடம் நேரடியா சொல்லிட்டேன்.

படத்துல கிளைமாக்ஸ் காட்சி, அதுக்கு இசையமைச்சிட்டு பாராதிராஜாவைக் கூப்பிட்டுக் காட்டினேன். அவரு அப்படியே கையை பிடிச்சிக்கிட்டு கண்ணீரோட “உனக்குப் பிடிக்காமலயே இவ்வளவு அருமையா இசையமைச்சிருக்கியேன்னு” உணர்ச்சிவசப்பட்டு பேசினார்’ என்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பெண்களே தொப்பை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?


சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும்.

ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும்.

ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

அழகைத் தக்க வைக்க:

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

வடிவேலுவின் அடுத்த படத்துக்கு தலைப்பு 'எலி'..? சரியாபோச்சு போ..!


வடிவேலு நடிக்கும் அடுத்த படத்துக்கு எலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தெனாலிராமன் படத்துக்குப் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் வடிவேலு.

இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் 1970 காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. வடிவேலுவின் அடுத்த படத்துக்கு தலைப்பு 'எலி'? எழுபதுகளில் தமிழகத்தில் மேற்கத்திய பாணி அறிமுகமானதை கதைக் கருவாக வைத்துள்ளார்களாம்.

இதில் நடிக்கும் வடிவேலு, ஒரு எலியைப் போன்ற உடல்மொழி கொண்டவராக வருகிறாராம். முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்துக்கு எலி என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

 வரும் செப்டம்பர் மாதம், வடிவேலுவின் பிறந்த நாளன்று தொடங்குகிறது 'எலி'!

நாங்கல்லாம் அப்பவே அப்படி..! இப்ப சொல்லவாவேனும் என்கிறார் சூர்யா..!


விஜய்யும், சூர்யாவும் ‘நேருக்கு நேர்’ மற்றும் ‘பிரண்ட்ஸ்’ படங்களில் இணைந்து நடித்தார்கள். தற்போது இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். பெரிய ரசிகர்கள் வட்டாரத்தையும் வைத்துள்ளனர்.

இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தமிழில் அப்படி இல்லை. பல நடிகர்கள் பேசிக் கொள்வதுகூட இல்லை. ஒருவர் பங்கேற்கும் விழாவில் மற்றவர்கள் கலந்து கொள்வதையும் தவிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் மலையாள பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்த சூர்யாவிடம், விஜய்யுடனான உங்கள் நட்பு எப்படி உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா அளித்த பதிலில் ‘‘விஜய் என்னுடைய நல்ல நண்பர். கல்லூரி காலத்தில் இருந்தே நட்பு தொடர்கிறது. ஒருவருக்கொருவர் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். என் படங்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகும் போதெல்லாம் அதை பார்த்து பாராட்டி மொபைல் போனில் தகவல் அனுப்புவார். சினிமா பற்றி அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்’’ என்றார்.

அமலாபால் இல்லேன்னா என்ன? அவசரத்துக்கு இவர் இருக்காரே!


அமலாபால் 45 வயது தோற்றத்தில் நடிக்கிறார். இப்படியொரு தகவலை தான் இயக்கப் போகும் ‘கிட்ணா’ படத்திற்காக கசிய விட்டிருந்தார் சமுத்திரக்கனி. அந்த இயற்கைக்கே இது பொறுக்கவில்லை. அமலாவை 45 வயதில் பார்ப்பதா? அப்படியெல்லாம் ஒரு துரதிருஷ்டம் தமிழனுக்கு தேவையா? என்றெல்லாம் யூத்துகள் பதறுவதற்குள், இல்லற பந்தத்தில் நுழைந்து, சினிமாவையும் துறந்துவிட்டார் அமலாபால். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கண்கட்டு வித்தையை ஒவ்வொரு ரசிகனும் ஏற்றுக் கொள்வதற்குள் அடுத்த வித்தை ஆரம்பம்.

இதே கிட்ணா படத்தில் மீண்டும் அமலா நடிப்பார். கல்யாணம் ஆனால் என்ன? அவரது கணவர் சம்மதித்தால் நடந்துவிட்டு போகட்டுமே என்றெல்லாம் கோடம்பாக்கம் மீண்டும் அமலாவுக்கு வலை வீச, அந்த வலையை கிழித்துவிட்டு, வம்படியாக உள்ளே நுழைந்திருக்கிறார் தன்ஷிகா. ‘அமலாபால் கேரக்டர்ல நான் நடிக்கிறேன்’ என்று சமுத்திரக்கனியை அவர் அணுகியதாகவும், பொன்னை வச்சாலும் சரி, பூவை வச்சாலும் சரி. காலா காலத்துல படத்தை முடிப்போம் என்று தன்ஷிகாவை ஓ.கே என்று டிக் அடித்துவிட்டாராம் சமுத்திரக்கனி.

அந்த 45 வயசு கெட்டப் தன்ஷிகாவுக்கும் உண்டு. அப்படின்னா…? மேக்கப் செலவுல கொஞ்சம் மிச்சமாகுமோ?

‘வாட்ஸ் அப்’பில் வெளியாகும் முதல் ஹிந்திப் பட டிரைலர் ‘ஹேப்பி நியூ இயர்’..!


பாலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ஹிந்திப் படம் ‘ஹேப்பி நியூ இயர்’. சூப்பர் ஹிட்டான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்குப் பிறகு ஷாருக்கன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தை ஃபாரா கான் இயக்கி வருகிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த அதே தீபிகா படுகோனே தான் இப்படத்திலும் கதாநாயகி! தனது ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் ஷாருக்கான், படத்தின் புரொமோஷன் வேலையில் ஒரு புதிய முயற்சியை செய்யவிருக்கிறார்.

அதாவது, வழக்கமாக ஒவ்வொரு படத்தின் டிரைலரும் யு-ட்யூப் அல்லது ஃபேஸ்புக்கில் தான் ரிலீசாவது வழக்கம்! ஆனால் தனது ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் டிரைலரை முதன் முதலாக சோஷியல் நெட்வொர்க்கின் அதி நவீன தொழில்நுட்பமான ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட இருக்கிறார் ஷாருக்கான்!

இந்த டிரைலரை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறது ‘ஹேப்பி நியூ இயர்’ பட டீம்! ‘வாட்ஸ் அப்’பில் வெளியாகும் முதல் ஹிந்திப் பட டிரைலர் ‘ஹேப்பி நியூ இயர்’ தானாம்.

என்ன..? சூர்யாவின் அஞ்சானும் 3 மணி நேர படமாம்!


இது டுவிட்டர் காலம். அதனால் 2 மணி நேரம அல்லது அதிகபட்சமாக இரண்டே கால் மணி நேரத்தோடு படத்தின் நீளத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் அதற்கு மேல் ரசிகர்கள் தியேட்டரில்

உட்கார மாட்டார்கள் என்று விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களே தங்களது இயக்குனர்களுக்கு ஆர்டர் போட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர்.

அதனால் 3 நேரம் வரை எடுக்கப்பட்டுள்ள அஞ்சான் படத்தை கடைசி நேரத்தில் தேவையில்லாத காட்சிகளை கத்தரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று அப்படியே ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். காரணம், ஏற்கனவே சூர்யா நடித்த சிங்கம் படத்தைப்போன்று இப்படமும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருப்பதால், கதை படு ஸ்பீடாக நகர்த்தப்பட்டுள்ளதாம். அதனால், கதையோடு நகரும் ரசிகர்களுக்கு படத்தின் நீளமே தெரியாத அளவுக்கு கதையோட்டம் இருக்கும் என்கிறார்கள்.

அஞ்சான் கதை கசிந்தது? அதிர்ச்சியில் படக்குழு! இதெல்லாம் ஒரு பொழப்பா..?


சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு தான் வெயிட்டிங். அஞ்சானை எப்படியாவது திரையில் பார்த்து விடவேண்டும் என்று ரசிகர்கள் வேகமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் இரண்டு சூர்யா இல்லை, ஒரே சூர்யா தானாம். தன் நண்பர் வித்யூ ஜம்வாலை கொலை செய்ததற்காக, டானாக இருந்த ராஜு பாய் சாதுவாக மாறி எதிரிகளை பலி வாங்குவது தான் கதை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இச்செய்தி வெளியே தெரிந்ததால் படக்குழு அதிர்ச்சி மட்டுமில்லாமல் யார் இதை வெளியே சொன்னது என்று கோபத்தில் இருக்கிறது. மேலும் நாம் முன்பே சொன்னது போல் பாஷா படத்தின் சாயலில் தான் படமும் வந்துள்ளது, இதை லிங்குசாமியே ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.