Friday, 1 August 2014

இன்றைய நகரத்து வாழ்கையின் உண்மைகள்.. ..?


1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

கோச்சடையன் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை - ஐஸ்வர்யா தனுஷ் சூடான விளக்கம்..!


உலகம் முழுவதம் மிகுந்த எதிர்பார்த்த கோச்சடையன் படம் சரியாக போகாமல் போனது என்னவே உண்மை தான் என்று முதல் முறையாக ரஜினி குடும்பத்திலிருந்து பதில் வந்து உள்ளது.

சமீபத்தில் ஐஸ்வர்யா தனுஷ் இது குறித்து வை ராஜா வை ப்ரோம்ஷனில் விளக்கம் தந்தார்

ஆம் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியடையாமல் போனது உண்மைதான், ஆனாலும் வசூலில் படம் ஹிட் என்ற ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது மற்றும் சூப்பர் ஸ்டாரை திரையில் பார்த்தாலே நமக்குள் ஒரு எனர்ஜி வந்துவிடும், ஆனால் இந்திய சினிமாவின் மோஷன் கேப்சர் டெக்னாலஜியை உபயோகித்ததால் சில தவறுகள் இருந்தது, இனி வரும் காலங்களில் எடுக்கப்படும் மோஷன் கேப்சர் படங்களுக்கு கோச்சடையான் ஒரு முன்மாதிரியாக இருக்கும்” என்று முதல் முறையாக கோச்சடையானை பற்றி விமர்சனம் கூறினார்.

ஜிகர்தண்டா சஸ்பென்ஸை உடைக்காதீர்கள்.... ரசிகர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்!


இப்போதெல்லாம் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படங்களையே ரசிகர்கள் நீளமாக இருப்பதாக முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படங்களே ரசிகர்களின் தேர்வாக இருக்கிறது. அண்மையில் வெற்றி பெற்ற பல படங்கள் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாக ஓடக்கூடிய படங்களே. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஜிகர்தண்டா படம் மிக நீளமான படமாக உள்ளது! இந்தப்படம் மொத்தம் 2 மணி 54 நிமிடங்கள் ஓடுகிறது! அதாவது இடைவேளை வரை 1 மணி 23 நிமிடமும், இடைவேளைக்குப் பிறகு 1 மணி 31 நிமிடங்களும் ஓடக்கூடிய அளவுக்கு ஏறக்குறைய மூன்று மணி நேரத்தை நெருங்குமளவுக்கு நீளமான படமாக உள்ளது!

இந்த வருடம் வெளியான படங்களிலேயே இதுவரை மிக நீளமான படம் என்று விஜய் நடித்த, 'ஜில்லா' படம்தான் சொல்லப்பட்டது! ஜில்லா படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடியது. ஜிகர்தண்டா படமோ ஜில்லாவின் நீளத்தை முறியடித்துவிட்டது! ஜிகர்தண்டா படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ள நிலையில் அப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்க ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜிகர்தண்டா படத்தை பார்க்கும் அன்பு ரசிகர்களே, தயவு செய்து படத்தில் இடம்பெறும் திருப்பங்களையும், கதையையும் வெளிப்படுத்தாதீர்கள்! எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கூறிப்பிட்டிருக்கிறார்.

இவர் இப்படி என்றால் சமீபகாலமாக சண்டைக்கோழி என பெயர் எடுத்து வரும் ஜிகர்தண்டா படத்தின் ஹீரோவான சித்தார்த்தும் தன் பங்குக்கு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஜிகர்தண்டா பைரசி சம்பந்தமான ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே எங்க டீமுக்கு தகவல் தெரிவியுங்கள், படத்தை தியேட்டரிலேயே பார்த்து ரசியுங்கள் என்பதே சித்தார்த்தின் வேண்டுகோள். ஜிகர்தண்டா சித்தார்த்தின் 21-ஆவது படம் என்பது கூடுதல் தகவல்!

நகங்களின் வெள்ளை திட்டுகளை சரி செய்ய முடியுமா?



நகங்களின் மேற்புறம் வெள்ளை வெள்ளையாக திட்டுகள் வந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அடிக்கடி உடைந்தும் போகிறது. இதைச் சரி செய்ய முடியுமா?

நகங்கள் வலுவிழந்து போவதற்குக் காரணம் கால்சியம் குறைபாடுதான். அதைச் சரி செய்தாலே பிரச்னை தீர்ந்துவிடும். பிரசவ காலத் திலும் டெலிவரிக்கு பிறகும் கால்சியம் குறைபாடு ஏற்படும். இந்தக் காலங்களில் நகங்களிலும் பாதிப்பு உருவாகும். சத்தான உணவு சாப்பிட வேண்டியது கட்டாயம். நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், தவிர்த்துவிட வேண்டும். வாரம் ஒரு முறை நீங்களாகவே மெனிக்யூர் செய்து கொள்ளலாம்.

 ஒரு பாத்திரத்தில் வெந்நீர், அரை எலுமிச்சைப் பழத்தின் சாறு, ஷாம்பு, டெட்டால் ஆகியவற்றைக் கலந்து அதில் கைகளை 5 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் நகங்கள் உறுதியாக அழகாக மாறும். நகங்கள் உடைந்து விழாமல் இருக்க ட்ரான்ஸ்பரன்ட் நெயில் பாலீஷை கைகளில் பூசி வரலாம்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அற்புத நெய்...!


நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

நெய்யில் Saturated fat – 65%, Mono – unsaturated fat – 32%, Linoleic – unsaturated fat -3%.

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் பயன்படுத்தலாம்.

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

ஞாபக சக்தியை தூண்டும், சரும பளபளப்பைக் கொடுக்கும், கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.

மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும்.

இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும், மலச்சிக்கல் நீங்கும், நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.