Sunday, 20 July 2014

புகை பழக்கத்தை விட வேண்டுமா..??

உலர் திராட்சையின் மகிமைதினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .


மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது,


மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது,
 

இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...

உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்..!

           உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் :

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடிதது வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றததை காணலாம்.

பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.

இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ் கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.

பச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ் காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தைபேறு தரும் எலுமிச்சை....!!!

        கொங்குநாட்டில் பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவன் `கோணவராயன்' என்ற குறுநில மன்னன். அவனது ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த நம்பியூரில் பழமைமிக்க பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பட்டத்து அரசி அம்மன் கோயில். இக்கோயில் தோன்றிய வரலாறு தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என்றபோதும் செவி வழிச் செய்தியாகப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

ஒருசமயம், திப்புசுல்தானின் படை வீரர்களால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. போரில் நம்பியூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அப்போது ஆட்சி செய்து வந்த பட்டத்து அரசியான மருதம்மா உயிர் நீத்தாள். அந்த அரசியின் வீரத்தை நினைவுகூரும் விதமாக, அங்குள்ள கோயிலில் அருளாட்சி புரிந்து வந்த அம்மனுக்குப் `பட்டத்து அரசி அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

போர் நடைபெற்றபோது படைகளைத் தலைமை தாங்கி நடத்திய அரசியையே `படைத்தலைச்சி அம்மன்' என்று பிற்காலத்தில் மக்கள் வணங்க ஆரம்பித்ததாகவும், அந்த அம்மனே இன்று பட்டத்தரசி அம்மன் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. கோயிலின் முன்னே விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது.

உள்ளே கன்னிமார் சிலைகள் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதி வாரம் வெள்ளி, திங்கள் கிழமைகள் இங்கே விசேஷமானவை. மிகப் பழமை வாய்ந்த பட்டத்து அரசி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு, அன்னையின் சூலத்தில் குத்திய எலுமிச்சங் கனியை பூசாரி கொடுத்து, பிழிந்து உண்ணச் சொல்வார்.

பல தம்பதிகளுக்கு இதனால் குழந்தைப்பேறு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கோபி செட்டிபாளையத்திலிருந்து கோவை செல்லும் பேருந்துப் பாதையில் 18 கி.மீ. தொலைவில் நம்பியூர் பாரதிநகரில் உள்ளது பட்டத்து அரசி அம்மன் கோயில்.

பிரசவத்தின் பின்னும் இளமையாக இருக்கனுமா..?

          சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினாலும் உடல் குண்டாவது இயல்பு. முகம் மட்டுமல்லாது, வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பல இடங்களில் உடல் அமைப்பே மாறிவிடும். பிரசவத்திற்குப் பின்னர் ஒரு சிலருக்குத்தான் உடம்பு இயல்பு நிலைக்கு திரும்பும். பெரும்பாலோனோர் குண்டம்மாக்களாகவே காட்சித்தருவார்கள். இதனால் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே புது அம்மாக்கள் தங்களின் பழைய உடம்பைப் பெற செய்யவேண்டிய ஏழு வழிமுறைகளை கூறியுள்ளனர் மகப்பேறு நிபுணர்கள் படியுங்களேன்.

தாய்பால் கண்டிப்பாக கொடுக்கணும்


பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். சிலர் கட்டுடல் குலைந்து விடும் என்று தாய்ப்பாலை சில மாதங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுதான் உடல் இளைக்காமல் போவதற்கு காரணமாகிறது. எனவே பெண்கள் கண்டிப்பாக ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதனால் உடல் கண்டிப்பாக இளைக்கும்.

ஜும்பா டான்ஸ் ஆடுங்க


நடனமாடுவது ஒருவகை உடற்பயிற்சிதான். லத்தின் நடனமான ஜும்பா நடனத்தை ஒருமணி நேரம் ஆடுவதன் மூலம் உடலில் 500 கலோரிகள் வரை குறைகிறதாம். இதனால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பாடு சரியா இருக்கணும்


கர்ப்பகாலத்தில் எந்த அளவிற்கு உணவில் கவனம் செலுத்தினோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபாஸ்ட் புட், எண்ணெயில்பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். காய்கறிகள், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

குட்டீஸ் உடன் வாக்கிங்

வீட்டுக்கு அருகாமையில் பார்க் அல்லது பீச் இருந்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வாக்கிங் போகலாம். அந்த வசதி இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நன்றாக ரவுண்ட் அடிக்கலாம். இதனால் உடல் மெலியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் அடிங்களேன்

கிராமங்களில் இருப்பவர்களுக்கு ஆறு, குளம் என நன்றாக நீந்திக்குளிக்க இடம் இருக்கும். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வசதி குறைவுதான். எனவே கண்டிப்பாக நீச்சல் குளத்திற்குச் சென்று நன்றாக நீந்தி பயிற்சி செய்யுங்கள். இது உடல் அமைப்பை பழைய நிலைக்கு மாற்றும்.

தூக்கம் அவசியமானது…

பிறந்த குழந்தையை வைத்திருப்பவர்கள் சில மாதங்கள் வரை தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் தாய்மார்கள் கண்டிப்பாக நன்றாக தூங்கவேண்டியது அவசியம். இதனால் செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு தேவையற்ற இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் கரையும். உடலும் பழைய நிலைக்குத் திரும்பும்.

ரிலாக்ஸ்சா இருங்களேன்

பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு ஒருவித மனஅழுத்தம் ஏற்படுவது இயல்புதான். உடல் இளைக்காமல் போவதற்கு இந்த மனஅழுத்தமும் ஒருவகையில் காரணமாகிவிடும். எனவே தியானம், மெடிடேசன் செய்து மனஅழுத்தத்தை போக்குங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!

                 நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்